அதிக கல்லுாரி உள்ள மாநிலம் தமிழகத்திற்கு ஐந்தாமிடம் | Tamil Nadu is the fifth state with the highest number of colleges

புதுடில்லி, மத்திய கல்வி அமைச்சகம் நாடு தழுவிய அளவில் நடத்திய ஆய்வில், அதிக எண்ணிக்கையிலான கல்லுாரிகள் உள்ள மாநிலமாக உத்தர பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், தமிழகம் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.

நாடு முழுதும் உயர் கல்வி பயிற்றுவிக்கும் கல்லுாரிகள் குறித்து, மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டு தோறும் ஆய்வு நடத்தி வருகிறது. இது, மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களின் தரவுகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இவற்றின் விபரம்:

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கல்லுாரிகள் உள்ள மாநிலங்கள் வரிசையில், உத்தர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.

இங்கு, 8,114 கல்லுாரிகள் உள்ளன. ஒவ்வொரு ஒரு லட்சம் மக்கள் தொகைக்கும், 32 கல்லுாரிகள் உள்ளன.

இந்த பட்டியலில், மஹாராஷ்டிரா இரண்டாம் இடமும்; கர்நாடகா மூன்றாம் இடமும் வகிக்கின்றன. இங்கு, முறையே 4,532 மற்றும் 4,233 கல்லுாரிகள் உள்ளன. இந்த பட்டியலில், தமிழகத்துக்கு ஐந்தாம் இடம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் 2,667 கல்லுாரிகள் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.