அரச ஊழியர்கள் உறுதிமொழி மேற்கொள்ளும் முக்கிய வைபவம் பிரதமர் தலைமையில் நாளை

அரச சேவையில் மனித வளத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து தற்போது நிலவும் சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்று அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் ஊழியர்கள் முன்னரிலும் பார்க்க சிறப்பான முறையில் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, புத்தாண்டில் அரச ஊழியர்கள் தமது பணிகளை ஆரம்பித்து உறுதிமொழி மேற்கொள்ளும் முக்கிய வைபவம் பிரதமர் … Read more

நடிப்பில் இருந்து விலகும் பிரபல வில்லன் நடிகர்!?

கடந்த 2004ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘விருமாண்டி’ திரைப்படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து அறிமுகமானவர் நடிகர் தீனா. தமிழில் எந்திரன், மாநகரம், தெறி, மெர்சல், வட சென்னை, பிகில், மாஸ்டர் என பல முன்னணி படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். திரை நடிப்பில் வில்லனாக அறியப்படும் இவர், நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோ என்று ரசிகர்கள் பலராலும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். சாதிய ஏற்றத்தாழ்வு கோட்பாடுகளுக்கு எதிராக பலமுறை குரல் கொடுத்து வந்தார். படம், சமூக … Read more

3 மாவட்டங்களில் மட்டும் இதுவரை ரூ.7 கோடிக்கு மதுவிற்பனை!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி ரூ.7 கோடியே 4 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. 2023 ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. இதனை இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் வாணவேடிக்கையுடன் வரவேற்றனர். கேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் ஆடல், பாடலுடன் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. புத்தாண்டு பிறப்பை மதுபிரியர்கள் தங்கள் நண்பர்களுடன் மதுபானம் அருந்தியபடி உற்சாகத்துடன் கொண்டாடினர். ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை … Read more

ஆபாசப்படம் பார்க்கும் கணவன்; பாதிக்கப்படும் மனைவி… தீர்வு என்ன?- காமத்துக்கு மரியாதை | S 3 E 23

ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்த படங்கள் தற்போது உள்ளங்கைகளுக்கு வந்துவிட்டன. அடுத்தவர் கண்களுக்கு பயந்து பயந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள், தற்போது எந்த இடத்தில் வேண்டுமானாலும் போர்னோகிராபி பார்க்க முடியும் என்கிற சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். அளவுக்கு மீறினால் நல்ல விஷயங்களே நஞ்சாகி விடுகையில், போர்னோகிராபி  பார்ப்பதால் வருகிற தீமைகளைச் சொல்லவும் வேண்டுமோ?  நம் வாசகர் ஒருவர், `நான் அடிக்கடி போர்னோகிராபி பார்ப்பேன். எனக்கு கல்யாணமாகிடுச்சு. எனக்கு செக்ஸ்ல விருப்பமே இல்ல. மனைவி மேல ஈடுபாடே வர மாட்டேங்குது. என் பிரச்னைக்கு தீர்வு இருக்கா?’ என்று கேட்டிருந்தார். அவருடைய பிரச்னைக்கு பதில் சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் … Read more

அசம்பாவித சம்பவங்கள் இல்லாத புத்தாண்டு: சென்னை பெருநகர காவல்துறை

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டம் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல், அமைதியாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டதாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், 2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல், விபத்தில்லா புத்தாண்டாக மகிழ்ச்சியுடன் அமைவதற்கும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரைகள், … Read more

‘அம்மா’ என்பது சாதாரண வார்த்தை அல்ல – பிரதமர் நரேந்திர மோடியின் மறக்க முடியாத நினைவுகள்

புதுடெல்லி: கடந்த ஜூன் 18-ம் தேதி பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது காந்தி நகருக்கு சென்ற பிரதமர் மோடி, தாய்க்கு பாத பூஜை செய்து வணங்கினார். அதோடு தாயின் வாழ்க்கை குறித்த நினை வலைகளை வலைப்பதிவில் வெளியிட்டார். அதன் சாரம்சம் வருமாறு: ‘அம்மா’ என்பது சாதாரண வார்த்தை அல்ல. அன்பு, பொறுமை,நம்பிக்கை என அந்த வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. ஒரு தாய் குழந்தையை பெற்றெடுப்பதோடு மட்டுமல்லாமல், அந்த … Read more

இது என்ன காதல் கடிதமா?.. வாங்க மாட்டேன்னு திருப்பி அனுப்புவதற்கு?.. எடப்பாடியை வறுத்தெடுத்த புகழேந்தி!

எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கடிதம் எழுதி ஓபிஎஸ் இடம் கொடுத்து விட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்றுக்கொள்ளட்டும்‌ என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் அவரது ஆதரவு கொள்கை பரப்பு செயலாளரான புகழேந்தி மற்றும் கரூர் மாவட்ட செயலாளர்களுடன் பெரிய குளத்தில் உள்ள ஓ. பன்னீர் செல்வத்தை சந்திக்க வந்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். திமுக மகளிருக்கு … Read more

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உ.பி. முதலிடம்; மகளிர் ஆணையம் ரிப்போர்ட்.!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகமாகி வருவதை புள்ளிவிவரங்கள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன. 2021ஆம் ஆண்டின் குற்ற புள்ளிவிவரங்களை கடந்த செப்டம்பர் மாதம் இந்திய அரசு வெளியிட்டது. முன் எப்போதையும் விட பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பது இதில் தெரியவந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்திய காவல்துறை பதிவு செய்த 60 லட்சம் குற்றங்களில் 4,28,278 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடைவை. 2016ஆம் ஆண்டு … Read more

நம்பிக்கையின் ஒளி நம் முன்னால் உள்ளது; சீன அதிபரின் புத்தாண்டு மெசேஜ்.!

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது. இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், … Read more

கார் சக்கரத்தில் மாட்டிய ஆடை; சாலையில் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக இறந்த பெண்!

புதுடெல்லி: டெல்லியின் புறநகர் பகுதியில் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி, கார் சக்கரத்தில் ஆடைகள் சிக்கியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனி – ஞாயிறு இரவு  நடந்த இந்த விபத்தில் சிறுமியின் ஆடைகள் கிழிந்த நிலையில், அவரது நிர்வாண உடலை போலீசார் கண்டுபிடித்தனர். முன்னதாக, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,  இழுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.  ஆனால் தற்போது அவர் விபத்தில் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் காரில் சிக்கியதாகவும் போலீசார் … Read more