விரைவில் பையா 2! ஆனால் ஹீரோ கார்த்தி இல்லை.. யார் தெரியுமா?

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘பையா’.  தமிழில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு, பெங்காலி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி அங்கும் படம் நல்ல வெற்றியினை கண்டது.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்றுவரை ரசிகர்களிடம் சிறந்த வைபை ஏற்படுத்தி வருகிறது.  எதார்த்தமான கதைக்களத்துடன் அமைந்த இந்த படம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது.  வழக்கமான கதை தான் என்றாலும் இப்படம் போர் அடிக்காமல்  ரசிக்கும்படி அமைந்திருந்தது தான் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.  கார்த்தியின் திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு சிறப்பான படமாக அமைந்திருந்தது, அதேபோல இயக்குனர் லிங்குசாமிக்கும் இந்த படம் பெரும் புகழை பெற்றுத்தந்தது.

ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் அந்த படத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது சில திருத்தத்தங்களை செய்து வேறு நடிகர்களை வைத்தோ படத்தின் அடுத்த பாகம் உருவாக்கப்படும்.  இந்நிலையில் பையா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குனர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ‘பையா-2’ படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்குமா அல்லது முற்றிலும் வேறுபட்ட கதைக்களமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  மேலும் ‘பையா-2’ படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட்டின்படி, படத்தின் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்திருந்த கார்த்தி-தமன்னா இருவரும் நடிக்கமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.  கார்த்திக்கு பதிலாக ஆர்யாவும், தமன்னாவிற்கு பதிலாக ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘பையா’ படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியினை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்கள் பெரியளவில் ரசிகர்களால் பாராட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் சோனியா தீப்தி, ஜெகன், மிலிண்ட் சோமன், தர்ஷன் ஜரிவாலா, ஜாஸ்பெர் போன்ற பலர் நடித்திருந்தனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.