தமிழ்நாட்டில் இன்று நாளை மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று நாளை மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் … Read more

பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் இருக்கிறது: குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் உரை

சென்னை: உலக அரங்கில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா திகழ்கிறது என்று ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் புத்தாக்க வசதி மையத்தை திறந்து வைத்து குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் உரையாற்றினார். பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் இருக்கிறது. 2014க்கு பிறகு நாடு வளர்ச்சியை நோக்கி செல்கிறது எனவும் ஜெகதீப் தன்கர் கூறினார்.

சச்சின் டெண்டுல்கருக்கு சிலை வைக்கப்படும்: மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலே அறிவிப்பு

மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு சிலை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியின்போது சச்சின் சிலை திறக்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலே தெரிவித்துள்ளார்.  

'அனைவரும் சமம்': திவ்யா கிருஷ்ணன் வெளியிட்ட குறள் வீடியோ!

நமது சமுதாய கட்டமைப்பில் மிகவும் நலிவுற்ற நிலையில் இருப்பது துப்புரவு தொழிலாளர்களின் சமூகம் தான். அவர்களின் அருமை கொரோனா காலக்கட்டத்தில் தான் அனைத்து மக்களுக்கும் புரிந்தது. அதுமுதலே பிரபலங்களில் சிலர், துப்புர தொழிலாளர்களின் வாழ்வியலையும், கஷ்டங்களையும், தியாகங்களையும் ஏதோ ஒருவகையில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தொலைக்காட்சி பிரபலமான திவ்யா கிருஷ்ணன் துப்புரவு தொழில் செய்யும் பெண்ணை தனதருகில் அழைத்து அவரை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, தினம் ஒரு திருக்குறள் என்ற தலைப்பில் திருக்குறளை … Read more

கொலை முயற்சி குற்றச்சாட்டு: சரிதா நாயர் ரத்த மாதிரிகள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு

திருவனந்தபுரம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர், அப்போதைய முதல் மந்திரி உம்மன்சாண்டி உள்பட பலர் மீதும் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின்பு ஜாமீனில் விடுதலையான சரிதா நாயர் அவ்வப்போது கேரள அரசியல் பிரமுகர்கள் … Read more

தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இன்று தொடக்கம்

செஞ்சூரியன், வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த போட்டி தொடரில் ஏற்கனவே இறுதி சுற்று வாய்ப்பை இழந்து விட்ட தென்ஆப்பிரிக்க அணி புதிய கேப்டன் பவுமா தலைமையில் களம் இறங்குகிறது. முன்னாள் கேப்டன் டீன் எல்கர், மார்க்ராம், … Read more

சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம் – நிக்கி ஹாலே

வாஷிங்டன், சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம் என்று முன்னாள் மாகாண கவர்னரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கொரோனா சீன ஆய்வகத்திலிருந்து வந்திருக்கலாம். அமெரிக்கா சீனாவுக்கான உதவியை நிறுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “எந்த ஒரு வலுவான அமெரிக்கரும், தன் பணம் மோசமான நபர்களுக்கு சென்றடைவதை விரும்ப மாட்டார்கள். இந்த வகையில், நான் அதிபராக … Read more

சவுதி அரேபிய உயர்மட்ட குழு இலங்கை விஜயம்

சவுதி நிதியத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதற்காக அந்நாட்டு உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. மத்திய நடவடிக்கை மற்றும் மேற்கு ஆசிய விடயங்கள் தொடர்பிலான பணிப்பாளர், பொறியியலாளர் Eng. Mohammad Al-Masoud,( Director of Operations for Central and West Asia,)  தலைமையிலான குழுவினரே தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த குழுவினர், இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர். இந்த நிகழ்வில் இலங்கைக்கான சவுதி அரேபிய … Read more

வேகத்தடைக்கு வெள்ளை கோடு.. சமூக சேவகியான இளம் பெண் மருத்துவர்.! குவியும் பாராட்டு.! 

பெண் மருத்துவர் ஒருவர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைக்கு வெள்ளை நிற பெயிண்ட் அடித்துள்ள சம்பவம் பெருங்களத்தூர் அருகே பாராட்டுகளை குவித்து வருகின்றது.  பெருங்களத்தூர் முதல் சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் வழியே கொளப்பாக்கம் செல்கின்ற முக்கிய சாலையில் வாகனங்களினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் விதமாக வேகத்தடைகள் சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது.   நாளடைவில் அந்த வேகத்தடையில் போடப்பட்டிருந்த மஞ்சள் மற்றும் வெள்ளை நிற கோடுகள் அழிந்து போனது. எனவே, அந்தக் கோடுகளை மீண்டும் போடும் நடவடிக்கையில் பாஜகவின் மாவட்ட … Read more