சென்னை : போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க வேண்டுமா? 

தமிழகத்தின் தலைநகரான சென்னை பெரு நகரத்தில் வளர்ச்சித் திட்டத்தை ஏற்படுத்த மூன்றாவது திட்டம் தயாரிக்கும் பணியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் சென்னையில், சாலைகளில் மிதிவண்டி ஓட்டுபவர்களுக்காக புதிய வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், சென்னையில் மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கு என்று தனிப் பாதை அமைப்பது, அதற்கு ஏற்ப பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்களில் சைக்கிள் வசதி ஏற்படுத்துவது … Read more

தமிழில் எழுதப்படாத பெயர் பலகைகள் மீது மை பூசி அழிப்போம்..!!

பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழை தேடி பரப்புரை பயணம் 7 ஆம் நாள் பொதுக்கூட்டம் திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. இதில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,சட்டமன்ற உறுப்பினர் கோ.க.மணி, பாவாணர் தமிழியக்கத்தின் அமைப்பாளர் முனைவர்.கு.திருமாறன், உலக திருக்குறள் பேரவை துணை தலைவர் திருக்குறள் சு.முருகானந்தம், எழுத்தாளர் ஜவஹர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? என தேடி கண்டுபிடிக்க வேண்டிய … Read more

சிவகாசி: அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக பெண் திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை!

சிவகாசி மாநகராட்சியில் கடந்த 2022 நவம்பர் 29-ந் தேதி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவகாசி மாநகராட்சி 5-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் இந்திராதேவி, “மாநகராட்சி வருவாய்பிரிவு அதிகாரிகள் சொத்துவரி தீர்வை மாற்றத்திற்கு லஞ்சம்கேட்டு எனது வார்டை சேர்ந்த பொதுமக்கள் அளித்த முறையீட்டு மனுவை பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பொதுமக்களிடம், அதிகாரிகள் கேட்ட லஞ்சப்பணத்தை மொத்தமாக நானே தந்துவிடுகிறேன்” எனக்கூறி தான் வைத்திருந்த பையிலிருந்து ரூ.1 லட்சத்து … Read more

காதல் கணவர் சேர்ந்து வாழ மறுப்பு… கணவரின் பெற்றோர் வீட்டு முன்பு மனைவி விபரீதம்

மதுரை திருமங்கலத்தில் காதல் கணவர் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்ததால், அவரது வீட்டு முன்பு இளம்பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். அண்ணா நகரை சேர்ந்த பாண்டீஸ்வரியும் NGO காலனியை சேர்ந்த நவீன் பிரகாசும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாண்டீஸ்வரியின் வீட்டில் 2 பேரும் வசித்தநிலையில், நவீன் பிரகாஷ் திடீரென சண்டையிட்டு விட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. நேற்று நவீன் பிரகாஸ் வீட்டுக்கு பாண்டீஸ்வரி சென்றபோது, அங்கிருந்த நவீனின் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைத்த ‘டோக்கன்’ 

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் கடைசி நேரத்தில் திமுக மற்றும் அதிமுகவினரின், ‘டோக்கன்’ விநியோகம் காரணமாக வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் 98-வது தொகுதியாக இடம்பெற்றுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி, கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரும், 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தற்போதைய அதிமுக வேட்பாளரான … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைத்த ‘டோக்கன்’ 

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் கடைசி நேரத்தில் திமுக மற்றும் அதிமுகவினரின், ‘டோக்கன்’ விநியோகம் காரணமாக வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் 98-வது தொகுதியாக இடம்பெற்றுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி, கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரும், 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தற்போதைய அதிமுக வேட்பாளரான … Read more

ஷிமோகா விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் – ‘ஹவாய்’ செருப்பு அணிந்தவர்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என விருப்பம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் ரூ.450 கோடியில் தாமரை வடிவத்தில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள பயணிகள் முனையக் கட்டிடம் ஒரு மணி நேரத்துக்கு 300 பயணிகளைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 775 ஏக்கர் பரப்பளவில் க‌ட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்துக்கு கன்னட தேசியக் கவிஞர் குவெம்புவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று நடைபெற்ற விமான நிலைய திறப்பு விழாவில், பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் … Read more

Siddharth, Aditi Rao: தீயாய் பரவும் சித்தார்த், அதிதி ராவ்வின் வீடியோ: ஹன்சிகாவின் ரியாக்ஷன்.!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமானவர் சித்தார்த். தற்போது இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சித்தார்த் மணிரத்னம் பட நடிகையுடன் நடனமாடிய க்யூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. நடிகரான சித்தார்த்த் அவ்வப்போது சமூக பிரச்சனைகள் பற்றியும் பேசுவார். ஆளும் ஒன்றிய அரசுக்கு எதிராக பல துணிச்சலான கருத்துகளை தனது சமூக வலைத்தள பக்கங்களில் … Read more