குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் புகைமண்டலம் பரவியதால் பள்ளிகளுக்கு 2வது நாளாக விடுமுறை…!

கன்னியாகுமரியில் நாகர்கோயில் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலம் பரவிய நிலையில், தீயை அணைக்கும் முயற்சி இரண்டாவது நாளாக தொடர்கின்றது.

பீச் ரோடு பகுதியில் உள்ள வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் பல ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது.

தற்போது மட்கும் குப்பை, மட்காத குப்பைகள் என பிரித்து வாங்கப்படுவதால், மட்காத குப்பைகள் மட்டும் இங்கு கொண்டு வரப்படுகிறது.

ஏற்கனவே இருக்கும், மட்காத குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக்குகள் அரைக்கப்பட்டு சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இங்கு அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதாக கூறப்படும் நிலையில்,நேற்று ஏற்பட்ட தீ சிறிது நேரத்தில் மளமளவென பரவியதில், அப்பகுதி முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்ததால், சுற்றுப்பகுதியில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இரண்டாவது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.