`சிறுதானிய மனிதன்’ பி.வி.சதீஷ் காலமானார்…!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள டெக்கான் டெவலப்மண்ட் சொசைட்டி (Deccan Development Society) இந்தியாவில் சிறுதானியங்கள் மீண்டும் மறுமலர்ச்சியடைய களப் பணியாற்றியது.

பி.வி.சதீஷ்

தெலுங்கானா மாநிலத்தின் ஜஹீராபாத்தை தளமாகக் கொண்ட டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டி (டிடிஎஸ்) நிறுவனர் பிவி சதீஷ் (77) உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவர் `தெலுங்கானாவின் சிறுதானிய மனிதன்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து இயற்கை விவசாயப் பணிகளையும் முன்னெடுத்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.வி.சதீஷ் 1983 ஆம் ஆண்டு ஹதாராபாத்தில் டெக்கான் டெவலப்மண்ட் சொசைட்டியை நிறுவினார். மேலும் வறட்சியான மேடக் மாவட்ட பகுதியின் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் பாரம்பரிய பயிர்களைப் பாதுகாக்கவும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.

Biodiversity yatra| Deccan Development Society (DDS)

இந்த மகத்தான பணிக்காக இவரது நிறுவனம் பல விருதுகளை வென்றுள்ளது. ஐக்கிய தேசிய வளர்ச்சித் திட்டம் வழங்கிய பூமத்திய ரேகைப் பரிசை டெக்கான் டெவலப்மண்ட் சொசைட்டி பெண்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.

பி.வி.சதீஷ் மறைவு அவரது அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.