#BREAKING : தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!!

தமிழ்நாடி சட்டப்பேரவையில் 2023 – 2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் ஒர் பார்வை:

திருக்குறளை வாசித்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி” என்ற திருக்குறளைக் குறிப்பிட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சபாநாயகர் அப்பாவு பட்ஜெட் வாசித்த பின்னர் அதில் நிறை, குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் . இப்போது அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனாலும் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பட்ஜெட் வாசிக்கப்படும் போது பட்ஜெட் உரையை தவிர வேறு எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது என்று கூறினார். இதனையடுத்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வருவாய் பற்றாக்குறையை ₹30,000 கோடியாக குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் இது மேலும் குறைக்கப்படும்

உக்ரைன் போர், உலகளாவிய நிதி நெருக்கடிகள் காரணமாக வரும் ஆண்டில் நிதி ரீதியாக நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும்.

அம்பேத்கர் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.

இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ.223 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு 3959 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

சென்னை கிண்டியில் கருணாநிதி பெயரில் இந்த ஆண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்படும்.

மருத்துவத் துறைக்கு ரூ.18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கான கட்டிடங்கள் புதிதாக கட்டப்படும்.

வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கப்படும். ரூ.120 கோடி செலவலி சென்னை அம்பத்தூரில் உலகளாவிய தொழில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

மதுரையில் உள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

உயர்கல்வித் துறைக்கு ரூ.6967 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குத் தயாராக 1000 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.3513 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம செய்யப்படுகிறது. இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ₹11 கோடி ஒதுக்கீடு

வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம்

முன்னாள் படைவீரர்கள் நலன்: போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ₹20 லட்சம் நிதியுதவி ₹40 லட்சமாக அதிகரிப்பு

தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவு செய்யப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ₹1500 ஆக அதிகரிப்பு

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ₹2000 ஆக அதிகரிப்பு

சென்னை கிண்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டே திறக்கப்படும்..

4.3 லட்சம் மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீனவர் நலத்திட்டங்களுக்கு ரூ.389 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கடல் அரிப்பை தடுக்கவும், மாசுப்பாட்டை குறைக்கவும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கூறினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்

தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் 80,000 ஹெக்டேரில் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் 18-வது வனவிலங்கு சரணாலயமாக இது இருக்கும்.

நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

உணவு மானிய திட்டத்துக்காக ரூ.10,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம் ரூ.25 கோடியில் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்குவதால் உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்திருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.

கோவையில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.கோவை செம்மொழி பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த்தார்.

கோவையில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும்.

மதுரையில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை திருமங்கலத்தையும், ஒத்தக்கடையும் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

எழில்மிகு கோவை, மாமதுரை திட்டங்கள் செயல்படுத்தப்படும் 2 நகரங்களும் மேம்படுத்தப்படும்.

கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டியில் ரூ.20 கோடியில் விளையாட்டு பொழுதுபோக்கு மாயம் அமைக்கப்படும்

சென்னையில் ரூ.621 கோடியில் புதிய 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும்

ரூ.621 கோடியில் அண்ணாசாலையில் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம் கட்டப்படும்

ரூ.1,000 கோடியில் வடசென்னை வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும். 3 ஆண்டுகளில் வடசென்னையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்

தமிழ்நாட்டில் கிராம பகுதிகளில் 10,000 குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடியில் புதுப்பிக்கப்படும்.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் ரூ.7,145 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.