எல்லையைக் கடந்து கனடாவுக்குள் நுழையமுயன்ற புலம்பெயர்வோர்: கனேடிய பெண் கண்ட கலங்கவைத்த காட்சி


கனடா அமெரிக்க எல்லை பரபரப்படைந்துள்ள நிலையில், எல்லை கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் Roxham Road என்ற இடம் மூடப்பட்டது தெரியாமலே இன்னமும் பணம் செலவு செய்து அப்பகுதிக்கு வருகிறார்கள் புலம்பெயர்வோர் பலர்.

கனேடிய பெண் கண்ட கலங்கவைத்த காட்சி

கனடா அமெரிக்க எல்லையில், கியூபெக்கிலுள்ள Hemmingford என்ற இடத்தில் வாழ்ந்துவருகிறார் ஈவ்லின் (Evelyne Bouchard).

அவர் வாழும் பகுதிக்கு அருகில்தான் Roxham Road அமைந்துள்ளது. திடீரென அப்பகுதிக்கு கனேடிய பொலிசார் வருவதைக் கவனிக்கிறார் ஈவ்லின்.

சிறிதுநேரத்தில், எல்லை கடந்து கனடாவுக்குள் நுழைய முயன்ற ஒரு குடும்பத்தைக் கைது செய்து அவர்கள் அழைத்துச் செல்வதைக் கண்ட ஈவ்லின் திடுக்கிடுகிறார்.

எல்லையைக் கடந்து கனடாவுக்குள் நுழையமுயன்ற புலம்பெயர்வோர்: கனேடிய பெண் கண்ட கலங்கவைத்த காட்சி | Roxham Road Border Crackdown Painful Dramas

Charles Contant/CBC

இரண்டு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள், அவற்றில் ஒன்று சிறுகுழந்தை, பெற்றோரைக் கைது செய்து, அந்தக் குழந்தையை கைகளில் தூக்கிக்கொண்டு பொலிசார் செல்வதைப் பார்க்க, ஈவ்லினுக்கு மனம் என்னமோ செய்கிறது.

காரணம், அவர் பலர் அந்த பகுதி வழியாக எல்லை கடப்பதைப் பார்த்தவர்.

எல்லை கடந்து கனடாவுக்குள் வந்தவர்களுக்கு உதவும் அமைப்பு ஒன்றில் தன்னார்வலராகவும் இருந்துள்ளார் ஈவ்லின். 

மாறிய காட்சி

ஆனால், இப்போது காட்சி மாறிவிட்டது. அமெரிக்காவும் கனடாவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இனி எல்லை கடப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

ஆக, முதன்முறையாக எல்லை கடந்து கனடாவுக்குள் நுழைந்த ஒரு சின்னஞ்சிறு குடும்பத்தை பொலிசார் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சியைக் கண்ட ஈவ்லினால் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை.

என் குடும்பம் இங்கே மகிழ்ச்சியாக சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது, சற்று தொலைவில் ஒரு குடும்பம் கடினமான ஒரு சூழலுக்குல் பிரவேசிக்கிறது.

இந்த மாறுபாடான நிகழ்வைத் தன்னால் தாங்கமுடியவில்லை, மனம் கனக்கிறது என்கிறார் ஈவ்லின். 

வெட்கமாக இருக்கிறது

இது ஒருவகையில் வெட்கத்துக்குரிய ஒரு செயல் என்கிறார் ஈவ்லின். நம் நாடு எவ்வளவு செல்வச் செழிப்பு மிக்க நாடு, இப்படித்தானா நம் நாட்டுக்குள் வருபவர்களை நாம் வரவேற்போம் என்று கேட்கும் ஈவ்லின், நாம் புகலிடம் கோர விரும்பும் மக்களுக்கு சரியான நடைமுறை எதையும் முறைப்படி செய்துகொடுக்காமல், மக்களை தங்கள் சின்னஞ்சிறு பிள்ளைகளுடன் காடுகளுக்குள் அபாயகரமான வகையில் நடக்க கட்டாயப்படுத்துகிறோம் என்கிறார்.

எல்லையைக் கடந்து கனடாவுக்குள் நுழையமுயன்ற புலம்பெயர்வோர்: கனேடிய பெண் கண்ட கலங்கவைத்த காட்சி | Roxham Road Border Crackdown Painful Dramas


CBC

தங்கள் சூழ்நிலை காரணமாக புலம்பெயரும் அவர்கள், எப்படியும் எல்லை கடப்பதை நிறுத்தப்போவதில்லை என்று கூறும் ஈவ்லின், இந்த இடம் இல்லையென்றால், அவர்கள் வேறு வழியாக எல்லையைக் கடக்க முயற்சிக்கப் போகிறார்கள் என்கிறார்.

அதில் ஒரு அபாயம் உள்ளது என்று கூறும் ஈவ்லின், வரும் நாட்களில் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கடத்தல்காரர்கள் பணம் பெற்றுக்கொண்டு, அபாயகரமான வகையில் புலம்பெயர்வோரை எல்லை கடக்கச் செய்ய முயற்சி செய்யலாம் என்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.