கோவையில் நாளை இறைச்சி கடைகள் இயங்க தடை..!!

மகாவீர் ஜெயந்தி நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்பு களைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூட வேண்டும். தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி கோவை மாநகராட்சியில் நாளை (04.04.2023) இறைச்சி கடைகள் இயங்க … Read more

மும்பை: தொடர்ந்து வழக்கு ஒத்திவைப்பு… நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி செருப்பை வீசிய நபர்!

மும்பை மான்கூர்டு மகாராஷ்டிரா நகரில் வசித்து வருபவர் பிரதீப் சுபாஷ். 2016-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில் பிரதீப் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் விசாரணை நீதிமன்றம் பிரதீப்பிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இச்சிறைத்தண்டனையை எதிர்த்து பிரதீப் மேல் முறையீடு செய்திருந்தார். இதனால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது. ஆனாலும் மேல்முறையீட்டு மனு தொடர்ந்து பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இழுத்தடித்து வந்தது. இந்த நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் … Read more

சொத்துக்காக சகோதரனை கூலிப்படையை ஏவி கொன்ற சகோதரிகள்..! உதவிய தாயும் போலீசில் சிக்கினார்

காரைக்குடி அருகே சொத்துக்காக கூலிப்படை வைத்து சகோதரனை கொலை செய்த இரு சகோதரிகளையும், தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆண் வாரிசு உயிரோடு இருந்தால், தனது மகள்கள் சொத்துக்களை அனுபவிக்க முடியாது என்று தாய் சொன்ன வார்த்தை வினையான விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாச்சுழியேந்தல் பகுதியில் வசித்து வந்தவர் அழகேசன். இவர் காரைக்குடியில் உள்ள யூகோ கிளை வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி இந்திரா, இவர்களுக்கு 3 … Read more

பயணிகள், சரக்கு போக்குவரத்து பிரிவில் தெற்கு ரயில்வே அதிக வருவாய் ஈட்டி சாதனை

சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்பட 6 கோட்டங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. பண்டிகை, முக்கிய நாட்களில் பயணிகள் நெரிசல் இன்றி பயணிக்கும் விதமாக, கூடுதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பயணிகள் எண்ணிக்கை உயர்வால், வருவாயும் அதிகரித்துவருகிறது. 2022-2023-ம் நிதியாண்டில் 64 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன்மூலமாக ரூ.6,345 கோடி வருவாய் கிடைத்துள்ளது. … Read more

மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ராக்கெட்டை பூமியில் தரையிறக்கும் சோதனை வெற்றி: இஸ்ரோ சாதனையில் மேலும் ஒரு மைல்கல்

பெங்களூரு: செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த பயன்படும் ராக்கெட்டுகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் புதிய ராக்கெட் தயாரிக்க செலவு அதிகரிக்கிறது. இதை கருத்தில் கொண்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் புதிய ராக்கெட்டை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். பல முறை பயன்படுத்த முடியும் இந்நிலையில் ஃபால்கன் வகை ராக்கெட்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இது செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது மனிதர்களையும் விண்ணுக்குக் கொண்டு சென்றுமீண்டும் பத்திரமாக தரையிறங்கும் வகையில் வடி வமைக்கப் பட்டுள்ளது. இதனை … Read more

Vijay: தளபதின்னா சும்மாவா.. உலகளவில் மாஸ் காட்டும் விஜய்: தெறிக்கவிடும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ரசிகர்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் மோதிக்கொள்வது இந்திய அளவில் பேசப்படும். ஒரு நடிகரின் ரசிகர்கள் இன்னொரு நடிகர் குறித்து நெகட்டிவ் டேக் ஓட்டுவது, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மற்றொரு தரப்பு அதைவிட கேவலாக நெகட்டிவ் டேக் ஓட்டுவது என்பது வழக்கம். எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் என்னதான் அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் படு ஆக்டிவாக செயல்பட்டாலும், எந்த வித சோஷியல் மீடியாவிலும் … Read more

சூர்யாவுடன் புதிய படம்! மாஸான அறிவிப்பை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

தமிழ் சினிமாவில் அதிகம் விரும்பப்படும் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார்.  இந்நிலையில் சூர்யாவுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணையப்போவது பற்றி செய்திகள் வெளியாகியுள்ளது.  கடந்த ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யா ‘ரோலக்ஸ்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார்.  படத்தின் க்ளைமேக்சில் சில நிமிடங்களே சூர்யா திரையில் தோன்றினாலும் மனதில் நிலைத்து நிற்கும்படி படத்தில் இவரது … Read more

வட மாநிலத்தவர்கள் இல்லை என்றால் தொழில் நடத்த முடியாது – பாலகிருஷ்ணன்!

வட மாநிலத்தவர்கள் இல்லை என்றால் தமிழ்நாட்டில் தொழில்கள் நடத்த முடியாது. தமிழர்களும் வெளி மாநிலங்களில் வேலை பார்க்கிறார்கள் என கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கரூர் சுங்ககேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  பாஜக ஆட்சி எல்லை தாண்டி போகிற ஆட்சியாக இருக்கிறது. முழுமையாக பாராளுமன்றத்தை நடத்த முடியாத ஆட்சியாக பாஜக உள்ளது. அதானி  முறைகேடுகளில் நடந்ததா, இல்லையா என்பதை … Read more

உக்ரைனுக்கு எதிரான போரில் 2 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு.. இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்!

உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் போரின் போது ரஷ்ய வீரர்கள் அதிகப்படியாக மது அருந்தியதால் உயிரிழப்பு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. ஆயுதங்களை மோசமாகக் கையாளுதல், அதிகப்படியான மதுப்பழக்கம் போன்றவைகளால் ரஷ்ய வீரர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்தி கொண்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சாலை விபத்துக்கள், தாழ்வெப்பநிலை போன்றைவைகளும் ரஷ்ய வீரர்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன. Source link