என் நடத்தையிலா சந்தேகப்படுற… கணவனை செங்கலால் அடித்து கொன்ற மனைவி..!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் நவடா நதுவா கிராமத்தை சேர்ந்தவர் பப்பு (25). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே, தனது மனைவி வெறொரு நபருடன் தொடர்பில் உள்ளார் என்று பப்பு நினைத்து உள்ளார். இதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்தபோதும் பப்பு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து சண்டையிட்டு வந்தார். இந்நிலையில், நடத்தையில் சந்தேகப்பட்டு கடந்த சனிக்கிழமை இரவு பப்பு தனது மனைவியிடம் மீண்டும் சண்டையிட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் … Read more

ஓசூர் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு – 88-வது நாளாக விவசாயிகள் போராட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 5-வது சிப்காட் அமைக்கும் பணிக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறு, குறு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், நேற்று … Read more

அண்ணாமலையார் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தமும், 5ம் பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தமும் அமைந்துள்ளது. பாதுகாப்பையொட்டி இந்த குளத்தில் பக்தர்கள் இறங்கவும், புனித நீராடவும் அனுமதியில்லை. சுவாமி தீர்த்தவாரி நடைபெறும்போது மட்டும், கோயில் குளத்துக்குள் இறங்க சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் நேற்று செத்து மிதந்தன. அதனை பார்த்த பக்தர்கள் வேதனை அடைந்தனர். மிதந்த மீன்களை கோயில் ஊழியர்கள் அகற்றினர்.  … Read more

‘எங்க ஊருல வந்து பேசிப் பாருங்க’மிரட்டல் விடுத்த அசாம் முதல்வர் விருந்துக்கு அழைத்த கெஜ்ரிவால்

கவுகாத்தி: அசாம் சென்ற டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அவதூறு வழக்கு தொடருவதாக தனக்கு மிரட்டல் விடுத்த அசாம் பாஜ முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவை மதிய விருந்துக்கு அழைத்து பதிலடி தந்துள்ளார். அசாம் பாஜ முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘  என் மீது ஊழல் வழக்கு இருப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகிறார்.  ஏப்ரல் 2ம் தேதி அசாம் வரும் அவர் இங்கு வந்து என்னை ஊழல்வாதி என்று சொல்லட்டும். அடுத்த நாளே, மணீஷ் … Read more

Suriya 42 OTT Rights: சூர்யா 42 ரைட்ஸை தட்டித் தூக்கிய அமேசான்… பல கோடிகளில் நடந்த பிசினஸ்!

சென்னை: நடிகர் சூர்யாவின் 42 வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். சூர்யா 42 என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படம் 10 மொழிகளில் 3 டி டெக்னாலஜியில் உருவாகி வருகிறது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டீசர், டைட்டில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சூர்யா 42 படத்தின் ஓடிடி ரைட்ஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா 42 அப்டேட் ஸ்டுடியோ க்ரீன் தயாரித்து வரும் … Read more

#BREAKING:: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து..!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசியின் 14 மாடுகள் கொண்ட கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்த நிலையில் எல்ஐசி கட்டிடத்தின் 14 வது மாடியின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அண்ணா சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புவீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி … Read more

சாதி, மத உணர்வை தூண்டும் வகையில் எழுத கூடாது – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

சென்னை: சாதி, மத உணர்வு மற்றும் பிரிவினையைத் தூண்டும் வகையில் யாரும் எழுதக்கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நாட்டின் உயர்ந்த இலக்கியப் பரிசான ‘சரஸ்வதி சம்மான்’ விருதுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் அவருக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழாநடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எழுத்தாளர் சிவசங்கரிக்கு நினைவுப் பரிசு வழங்கி பேசியதாவது: புத்தக வாசிப்பு குறைந்துவிட்டதாக பலரும் … Read more

பெண் ஒருவர் அளித்த பரிசுப்பொருள்… புடின் ஆதரவாளரான பிரபலம் உடல் சிதறி பலி

ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆதரவாளரான சமூக ஊடக பிரபலம் ஒருவர் வெடிகுண்டு தாக்குதலில் உடல் சிதறி பலியாகியுள்ளார். பரிசுப்பொருளில் வெடிகுண்டு குறித்த நபருக்கு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அளித்த பரிசுப்பொருளில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய இராணுவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் காணொளிகளை பகிர்ந்து வருபவர் 40 வயதான Vladlen Tatarsky. இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ள நிலையில், வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியாகியுள்ளார். இவருடன் அந்த சம்பவத்தில் 25 … Read more

பயிர்க்கடனுக்கான வட்டியை ரத்து செய்ய ரூ.350 கோடி நிதி: அரசு விடுவித்தது

சேலம்: பயிர்க்கடனை கால அவகாசத்திற்குள் செலுத்திய விவசாயிகளின் பயிர்கடன் வட்டி ரத்து செய்யப்பட்டு, அதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.350 கோடியை அரசு விடுவித்துள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன்கள் வழங்கப்படுகின்றன. கடன் பெற்ற தேதியில் இருந்து, குறித்த காலத்திற்குள் கடனை முழுதும் செலுத்துவோருக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள், தங்களின் தேவைக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்க … Read more

திருப்பதியில் 30 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை சற்று அதிகரித்து காணப்படும். இதனால் தரிசனத்துக்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதன்படி, சனிக்கிழமையான நேற்று முன்தினம் 75 ஆயிரத்து 510 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 36 ஆயிரத்து 272 பக்தர்கள் தலைமுடியை … Read more