செயற்கைகோள்களை புவிவட்ட பாதையில் விட்டுவிட்டு மீண்டும் திரும்பும் மறுபயன்பாட்டு விண்கலத்தை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ..!

விண்ணில் செலுத்தப்படும் செயற்கைகோள்களை புவிவட்ட பாதையில்  விட்டுவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையிலான மறுபயன்பாட்டு விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது. RLV – LEX என்ற பெயரிலான இந்த விண்கலம், கர்நாடகாவின் சித்திரதுர்கா ஏரோ நாட்டிக்கல் மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்திய பாதுகாப்புத்துறை, இந்திய விமான படையுடன் இணைந்து இந்த சோதனையை நடத்தியுள்ளது. முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மீண்டும் பயன்படுத்தும் வகையிலான இவ்வகை வாகனமானது இஸ்ரோவின் புதிய சாதனைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.  Source link

2022-23-ம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு பயணிகள் சேவை மூலம் ரூ.6345 கோடி வருவாய்

சென்னை: 2022-23-ம் நிதியாண்டில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து பிரிவில் அதிகபட்ச வருவாயை தெற்கு ரயில்வே ஈட்டியுள்ளது. தெற்கு ரயில்வேயில் 2022-23-ம் நிதியாண்டில் 640 மில்லியன் (64 கோடி) பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலமாக, ரயில்வேக்கு ரூ.6,345 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2021-22-ம் நிதியாண்டில் 339.6 மில்லியன் பேர் பயணம் செய்திருந்தனர். இதன் மூலம் ரூ.3,539.77கோடி வருவாய் கிடைத்துள்ளது தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த வணிக மேம்பாட்டு குழு அனைத்து கோட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. … Read more

காங்கிரஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கட்சியை ஒழுங்குபடுத்த வேண்டும்: முன்னாள் பிரதமர் தேவகவுடா

பெங்களூரு: நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் முதலில் கட்சியை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. இதனால், அம்மாநிலத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு முன்னாள் … Read more

"அதிமுகவில் இருந்து விலகியது நெருடல்தான்".. சட்டென சொன்ன நயினார் நாகேந்திரன்.. ரூட் கிளியரா?

சென்னை: அதிமுகவில் இருந்து விலகியது தனக்கு நெருடலாக இருப்பதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நகமும் சதையுமாக இணைந்திருந்த பாஜக – அதிமுக கூட்டணியில் கடந்த சில மாதங்களாக பெரும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. அதன் உச்சக்கட்டமாக, பாஜகவின் ஐடி விங் நிர்மல் குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகளை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதை பாஜக விரும்பவில்லை. தன்னை தனிப்பட்ட முறையில் கடுமையாக வசைப்பாடிய பல நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி … Read more

ஹிஜாப் அணியாத இரு பெண்கள் தலையிலும் தயிர் டப்பாவை கவிழ்த்து அட்டகாசம் செய்தவன் கைது..!

ஈரானில், ஹிஜாப் அணியாத இரு பெண்கள் தலையில் தயிரை ஊற்றி ரகளை செய்தவனை கைது செய்த போலிசார், ஹிஜாப் அணியாததற்காக அந்த இரு பெண்களையும் சேர்த்து கைது செய்தனர். மஷத் நகரில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்கு வந்த ஒருவன், வரிசையில் நின்ற இரு பெண்களிடம் ஏன் ஹிஜாப் அணியவில்லை எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டான். பின், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தயிர் டப்பாவை எடுத்து இரு பெண்கள் தலையிலும் கவிழ்த்தான். கடை உரிமையாளர் ஓடி வந்து அவனை பிடித்து … Read more

இந்திய கடற்படையின் புதிய தலைமைப் பணியாளர் அதிகாரியாக பதவியேற்றார் வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி

இந்திய கடற்படையின் புதிய தலைமைப் பணியாளர் அதிகாரியாக வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி பதவியேற்றுக்கொண்டார். இதேபோல் கடற்படையின் புதிய துணைத் தலைவராக வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் சிங் பதவியேற்றார். வைஸ் அட்மிரல் சதீஷ் குமார் நம்தியோ கோர்மடே மார்ச் 31-ம் தேதியுடன் ஓய்வுபெற்றதை தொடர்ந்து துணைத் தலைவராக அறிவிக்கப்பட்ட ஜஸ்ஜித் சிங் இன்று பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக ஜஸ்ஜித் சிங் டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். Source link

தஞ்சை அருகே இன்று சுற்றுலா பஸ் கவிழ்ந்து 2 பேர் பரிதாப பலி: 44 பேர் காயம்

தஞ்சை: கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து நாகை வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பஸ் நேற்று இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 49 பயணிகள் இருந்தனர். திருச்சூரை சேர்ந்த சமீர்(45) உள்பட 2 டிரைவர்கள் பஸ்சை ஓட்டி வந்தனர். இன்று அதிகாலை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் ஒக்கநாடு கீழையூர் கீழத் தெருவில் ஒரு சாலை வளைவில் சாலையோர தடுப்பு சுவரில் மோதி பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த திருச்சூரை சேர்ந்த … Read more

சென்னை ஐசிஎஃப் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: சென்னை ஐசிஎஃப் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலைய பதிவேடுகள், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை பாராட்டிய டிஜிபி அவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கினார்

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமனை கொன்ற கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: உத்தரபிரதேச போலீசார் அதிரடி

முசாபர்நகர்: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமனை சுட்டுக் கொன்ற கொள்ளையனை உத்தரபிரதேச போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா உள்ளிட்ட குடும்பத்தார் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நகரில் வசித்து வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு ஆக. 19ம் தேதி  சுரேஷ் ரெய்னாவின் மாமா உள்ளிட்ட குடும்பத்தார் 4 பேரைத் தாக்கி கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். இதில் ரெய்னாவின் மாமா அசோக்குமார் கொல்லப்பட்டார். கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் அசோக் … Read more

Goodluck Studio :டைரக்டர் ஹரியின் ஸ்டூடியோ.. வேட்டி சட்டையில் கலக்கலாக வந்து துவக்கி வைத்த சூர்யா!

சென்னை : நடிகர் சூர்யா -இயக்குநர் ஹரி இணைந்து சிங்கம் படங்களின் பாகங்களை வெளியிட்டு ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தது. இவர்கள் மீண்டும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தற்போது இணைந்துள்ளனர். ஆனால் புதிய படத்திற்காக இவர்களது கூட்டணி அமையவில்லை. மாறாக இயக்குநர் ஹரியின் புதிய ஸ்டூடியோவை சூர்யா தற்போது திறந்து வைத்துள்ளார். நடிகர் சூர்யா நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து திரையில் மாயாஜாலங்கள் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த … Read more