தலைமைச் செயலாளர் பதவியேற்பு: சிவ்தாஸ் மீனாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்த இறையன்பு

தமிழ்நாட்டின் 49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பதவியேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சிவ் தாஸ் மீனா பதவியேற்ற நிலையில் இரண்டு ஆண்டுகளாக தலைமைச் செயலாளராக பணியாற்றிய இறையன்பு தனது பொறுப்புகளை சிவ்தாஸ் மீனாவிடம் ஒப்படைத்தார். இறையன்பு இன்று ஓய்வுபெறுவதை முன்னிட்டு அவரது எழுத்து, பேச்சு, செயலால் ஊக்கம் பெற்ற பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தலைமை செயலகத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். புதிதாக பொறுப்பேற்ற தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா … Read more

பிரான்சில் அடங்காத வன்முறை.. கையை பிசையும் மேக்ரான்.. பெற்றோர்கள் ஹெல்ப் பண்ணுங்க என கோரிக்கை

International oi-Mani Singh S பிரான்சில் அடங்காத வன்முறை.. கையை பிசையும் மேக்ரான்.. பெற்றோர்கள் ஹெல்ப் பண்ணுங்க என கோரிக்கை வாஷிங்டன்: பிரான்ஸ் நாட்டில் சிறுவன் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் பலியானதால் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மூன்றாவது நாளாக பற்றி எரிகிறது. இதனால், வன்முறையை கட்டுப்படுத்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் பெற்றோர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகர் அருகே நான்டர் எனும் இடம் உள்ளது. இங்கு அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த … Read more

NIA decides to set up Integrated Joint Action Committee | ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழு அமைக்க என்.ஐ.ஏ., முடிவு

சண்டிகர், வட மாநிலங்களில் இருந்தபடி, நாடு கடந்த மற்றும் தேசிய அளவில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தாதாக்களை கண்காணித்து ஒடுக்கும் வகையில், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் போலீசாருடன் இணைந்து ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள, என்.ஐ.ஏ., முடிவு செய்து உள்ளது. நாட்டில் நிகழும் பயங்கரவாத சம்பவங்களை விசாரிக்க, என்.ஐ.ஏ-., எனப்படும் தேசிய புலனாய்வுக் குழுவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. புதுடில்லியிலிருந்து செயல்படும் இந்த அமைப்பின் தலைவர் டிங்கர் குப்தா தலைமையில், மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த ஆலோசனைக் … Read more

'கேப்டன் மில்லர்' முதல் பார்வை வெளியீடு

'ராக்கி, சாணி காயிதம்' படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. ஒரு போர்க்களத்தில் எண்ணற்ற வீரர்கள் உயிரற்ற உடல்களாக இருக்க தனுஷ் துப்பாக்கி ஒன்றை ஏந்திக் கொண்டு நிற்கும் போஸ்டர் முதல் பார்வையாக வெளியிடப்பட்டுள்ளது. “கேப்டன் மில்லர் முதல் பார்வை, மரியாதை தான் சுதந்திரம்,” எனக் குறிப்பிட்டு அந்த போஸ்டரை பதிவு செய்துள்ளார் படத்தின் நாயகன் தனுஷ். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, … Read more

Prime Minister Modi – Russian President Putins decision to further strengthen bilateral relations | இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் முடிவு

மாஸ்கோ, உக்ரைன் விவகாரம், வாக்னெர் பிரச்னை குறித்து நேற்று போனில் ஆலோசனை நடத்திய நம் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினர். ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ஓராண்டுக்கும் மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு உறுதுணையாக இருந்த அந்நாட்டின் … Read more

Mari Selvaraj: சினிமாவை விட்டு விலகத் தோணும்.. மனமுடைந்து பேசிய மாரி செல்வராஜ்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகி நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் மாமன்னன். உதயநிதியின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. படத்தில் உதயநிதியுடன் வடிவேலு, பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள நிலையில், படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் காணப்படுகிறது. மனமுடைந்து பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ்: நடிகர்கள் உதயநிதி, வடிவேலு, பகத் … Read more

Elevate SUV – ஜூலை 3., எலிவேட் எஸ்யூவி முன்பதிவை துவங்கும் ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின், புதிய காம்பேக்ட் எஸ்யூவி எலிவேட் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ.21,000 ஆக வசூலிக்கப்பட்டு ஜூலை 3 ஆம் தேதி முதல் துவங்குவதனால், விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படலாம். எலிவேட் காருக்கான 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது. Honda Elevate bookings open … Read more

இன்றைய ராசிபலன் 01.07.23 | Horoscope | Today RasiPalan | சனிக்கிழமை | July 01| Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

சாத்தான்குளம் கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ல் சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர், 5 காவலர்களை கைது செய்தது. இந்த … Read more

பாட்னா கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஊழல்வாதிகள்: பிஹார் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு

முங்கர்: ‘‘பிஹார் தலைநகர் பாட்னாவில் சமீபத்தில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் எல்லாம் ஊழலில் ஈடுபட்டவர்கள்’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பிஹார் தலைநகர் பாட்னா வந்தார். விமான நிலையத்திலிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் முங்கர் மாவட்டம் லக்கிசாராய் நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அசோக் தாம் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அமித் ஷா வழிபட்டார். பின் லக்கிசாராய் பகுதியில் … Read more