கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை

கொப்பல்: கொப்பல் மாவட்டம் குஷ்டகி தாலுகா மலகிட்டி கிராமத்தை சேர்ந்தவர் பீராசாப்(வயது 33). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இதற்கிடையே அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சாரதா என்ற 30 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதுகுறித்து பீராசாப்பின் மனைவிக்கு தெரியவந்தது. உடனே அவர் கள்ளக்காதலை கைவிடுமாறு கணவரை வலியுறுத்தினார். ஆனால் … Read more

ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

சலாலா, 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென்கொரியாவுடன் மோதியது. இதில் எதிரணியின் கோல்கம்பத்தை அடிக்கடி முற்றுகையிட்டு மிரட்டிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்தினர். இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கொரியா வீரர்கள் திகைத்து போனார்கள். முடிவில் இந்தியா 9-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. தாமி பாபி … Read more

இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிய கடன் தொகைக்கான காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

கொழும்பு, இந்தியான் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு பெட்ரோல், டீசல், மருந்து, உணவு பொருட்களின் விலை கடுமையாக உயரந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனிடையே இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார உதவிகளை அளித்தன. இந்தியா மொத்தம் ரூ.32 ஆயிரத்து 800 கோடி கடன் அளித்தது. அவற்றில் ஒரு பகுதியாக, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடன் அளிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த … Read more

வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக பணமோசடி.!!

வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக பணமோசடி.!! சென்னையில் உள்ள பழைய வண்ணாரபேட்டை பகுதியை சேர்ந்தவர் தியா சுபபிரியா மகள் ரிதமீனா. இவர் வெளிநாட்டில் மருத்துவ படிக்க ஆசைப்பட்டுள்ளார். இவர்களிடம் வெளிநாட்டில் மருத்துவ படிப்பு இருப்பதாக கூறி பிரவீன் மற்றும் சதீஷ் ஜனார்தனன் உள்ளிட்டோர் அறிமுகமாகியுள்ளனர்.  இவர்கள் மூலமாக மேலும் இரண்டு பேர் ரிதமீனாவுக்கு அறிமுகமாகியுள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் இருப்பதாக ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரைக்கூறி அங்கு மருத்துவ சீட் பெறுவதற்காக ரூ.21 லட்சத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். … Read more

தருமபுரி | 50 கி.மீ தூர அலைச்சலுக்கு தீர்வான 1.5 கி.மீ நீள இணைப்பு சாலை – விரைந்து அமைக்க முத்தரசன் வலியுறுத்தல்

தருமபுரி: இரண்டு லட்சம் ஏழை மக்களின் 50 கிலோ மீட்டர் தூர அலைச்சலுக்கு தீர்வு ஏற்படுத்தக் கூடிய 1.5 கிலோ மீட்டர் நீள சாலையை பல ஆண்டுகளாக அமைக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் நேற்று (புதன்) தருமபுரியில் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் கோம்பேரி பகுதியில் சிறு, சிறு மலைப்பகுதிகள் உள்ளன. இதில், 2 சிறிய மலைகளுக்கு இடையில் கணவாய் போன்ற ஒரு பகுதி உள்ளது. இவ்வழியாக சுமார் … Read more

கேரளா, கர்நாடகா, பிஹாரில் பாப்புலர் ஃபிரன்ட் அமைப்புடன் தொடர்புடைய 25 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: கேரளா, கர்நாடகா, பிஹார் ஆகிய மாநிலங்களில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புடன் தொடர்புடைய 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பிஹார் சட்டப்பேரவையின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாட்னா சென்றார். அப்போது பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த சதி திட்டத்தை முறியடித்தனர். … Read more

மேகதாது அணை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட ராமதாஸ் வேண்டுகோள்!

மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் புதிய முயற்சிகளை தமிழக அரசு விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தின் புதிய நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை எப்பாடு பட்டாவது கட்டியே தீர வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருக்கிறார். மேகதாது அணை தொடர்பான பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தடை … Read more

Ayalaan: அயலான் டீசர் எப்போது ? இயக்குனர் சொன்ன செம அப்டேட்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் தமிழ் சினிமாவில் மளமளவென வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வந்தார். ரஜினி மற்றும் விஜய்யை போல கமர்ஷியல் பார்முலாவை கையிலெடுத்து வயது வித்தியாசமின்றி ரசிகர்களை சம்பாதித்தார் சிவகார்த்திகேயன். இருப்பினும் சிவகார்த்திகேயன் ஒரே மாதிரியான படங்களில் நடித்து வருகின்றார் என அவர் மீது … Read more

சீனா மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துங்கள் : பாஜகவுக்கு ஓவைசி சவால்

சங்கா ரெட்டி, தெலுங்கானா தைரிய்ம் இருந்தால் சீனா மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துங்கள் என பாஜகவுக்கு அசாதுதீன் ஓவைசி சவால் விடுத்துள்ளார். ஐதராபாத் பெருநகர மாநகராட்சிக்கான தேர்தல் சமயத்தில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சை, “ஐதராபாத் உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் ரோகிங்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வாக்காளர்களின் உதவியுடன் வெற்றி பெற முயல்கிறார்கள். எனவே ஐதராபாத் பெருநகர மாநகராட்சி தேர்தல் பாகிஸ்தான், … Read more