மனித குலத்திற்கு அடுத்த ஆபத்து… அலறவிடும் பாக்டீரியா… அமெரிக்காவில் மக்கள் பெரும் அதிர்ச்சி!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
சர்வதேச அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் நீங்கவில்லை. இரண்டு ஆண்டுகள் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப் படைத்துவிட்டது. பல லட்சம் உயிர்களை இழந்திருக்கிறோம். பல கோடி பேர் அச்சத்துடன் மீண்டு வந்துள்ளோம். தீவிர கட்டுப்பாடுகள், தடுப்பூசி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றால் கொரோனா நெருக்கடியை தற்போது பெரிதும் குறைத்துள்ளோம்.

அமெரிக்காவில் ஆபத்து

இந்த சூழலில் ஆபத்தான பாக்டீரியா நம்மை தாக்க வருகிறது என்று சொன்னால் எப்படியிருக்கும்? இப்படி ஒரு செய்தி தான் அமெரிக்க மக்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. அந்நாட்டின் வளைகுடா கடற்கரை பகுதியில் வசித்து வந்த மூன்று பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நியூயார்க் நகரம் கீழ இறங்குது… தண்ணீ ஏறுது… திக் திக் மக்கள்… இப்படியே போனா?

யாருக்கெல்லாம் சிக்கல்

அங்கு பரிசோதனை செய்ததில் புர்கோல்டெரியா சூடோமல்லெய் (Burkholderia Pseudomallei) என்ற பாக்டீரியா பாதித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிக மிக ஆபத்தான ஒன்று என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பிற்கு ஆளானவர்கள், அதிகப்படியாக மது அருந்துவோர் ஆகியோருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளனர்.

எங்கெல்லாம் காணப்படும்

அதாவது, உயிரிழப்பிற்கு 50 சதவீதம் அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். இந்த பாக்டீரியா இயற்கையாகவே மண் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள புதிய நீர் ஆகியவற்றில் காணப்படக் கூடியது. குறிப்பாக வெப்ப மண்டல, துணை வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படும் என்கின்றனர்.

பல ஆண்டுகளுடன் இயற்கையின் அங்கமாக இணைந்து காணப்படுகிறது. மனிதர்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் வரை பிரச்சினை கிடையாது. இதனால் பெரிதாக கண்டுகொள்ளப்படாமல் இருந்தது.

உயிரிழப்பு ஆபத்து

தற்போது மனிதர்களை தாக்கி பாதிக்க தொடங்கியுள்ளது. நல்ல வேளையாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இருப்பினும் 50 சதவீத உயிரிழப்புகளுக்கு வாய்ப்பிருக்கிறது என்ற செய்தி எச்சரிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. புர்கோல்டெரியா சூடோமல்லெய் பாக்டீரியா ஆனது கிட்டதட்ட பச்சோந்தி என்று சொல்லலாம். பச்சோந்தி நிறத்தை இடத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும்.

23 பேருக்கு மரண தண்டனை… ISIS தாக்குதலில் தொடர்பு… நீதிமன்றம் அதிரடி!

மிசிசிபியில் நோய்த்தொற்று

ஆனால் மேற்குறிப்பிட்ட பாக்டீரியா தனது வடிவத்தை வெவ்வேறு விதமாக மாற்றிக் கொள்ளும். கடந்த 2020ஆம் ஆண்டு மே – ஜூலை காலகட்டத்தில் அமெரிக்காவின் மிசிசிபி பகுதியில் இரண்டு பேருக்கு இந்த பாக்டீரியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட ஆராய்ச்சி

சமீபத்திய நிகழ்வு என்று பார்த்தால் ஜனவரி 2023ல் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஆபத்தான பாக்டீரியா எப்படி அமெரிக்காவின் வளைகுடா கடற்கரை பகுதிக்குள் எப்படி நுழைந்தது என்று தெரியவில்லை. இதுதொடர்பான அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.