எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் செய்த காரியம் – இதுதான் சமூக நீதியா? கிழித்து தொங்கவிட்ட சீமான்

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தன்னைச் சந்திக்க வந்தவர்களை நாற்காலிகள் இருந்தும் உட்காரச் சொல்லாமல் நிற்க வைத்து பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில் அமைச்சரின் செய்கை கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இது தொடர்பாக

கட்சியின் ஒருங்கிணைப்பாளர்

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூகநீதி காவலர்கள் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்ளும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சருமான ஐயா எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் தான் மட்டும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தம்மை சந்திக்க வந்த பரங்கிபேட்டை ஜமாத்தை சேர்ந்த இசுலாமிய பிரதிநிதிகளை நாற்காலிகள் இருந்தும் நிற்கவைத்தே பேசி அனுப்பியுள்ளார். இதுதான் திமுக கடைபிடிக்கும் சமத்துவமா?

இன்றைய திமுகவில் மூத்த அமைச்சர் என்றால் செந்தில் பாலாஜி தான் – Journalist Pandian

இசுலாமியப் பெருமக்களை வெறும் வாக்கு வங்கிகளாக இன்னும் எத்தனை காலத்திற்கு திமுக ஏமாற்றபோகிறது? இசுலாமியர்களின் வாக்கு வேண்டும், அவர்களுக்கான அடிப்படை உரிமை வேண்டாமா? நீண்டகால இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவில்லை. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இசுலாயாமியர்களுக்கு உரிய பிரதிநிதிதுவத்தையும் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் இசுலாமிய பிரதிநிதிகளை சம்மாக உட்கார வைக்ககூட மனமில்லையா?

கடைப்பிடிக்கமுடியாத சூழ்நிலையிலும் கடைப்பிடிப்பதற்கு பெயர்தான் மாண்பு. மக்களால் மாண்புமிகு அமைச்சர் என்று மரியாதையோடு அழைக்கப்படும் உயர்ந்த பொறுப்பினை வகிப்பவர் சக மனிதர்களை மரியாதையாடு நடத்தும் அடிப்படை மனித பண்புகூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் திராவிட மாடலா?

இதுதான் ஐம்பதாண்டுகளாக தமிழ் மண்ணில் திமுக கட்டிக்காத்த சமூகநீதியா? இதுதான் திராவிடம் வளர்த்தெடுத்த சுயமரியாதையா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.