Maaveeran: சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்லை.. என்ன மிஷ்கின் இப்படி சொல்லிட்டாரு.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’. நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்தப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இதனிடையில் நேற்றைய தினம் வெளியான ‘மாவீரன்’ படத்தின் டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘மாவீரன்’ உருவாகியுள்ளது. மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே மும்முரமாக நடந்து வந்தது. ‘மண்டேலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். தனது முதல் படத்திலே விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனையடுத்து தனது இரண்டாம் படத்திலே சிவகார்த்திகேயனை வாய்ப்பினை கைப்பற்றினார் மடோன் அஸ்வின். தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நேற்றைய தினம் இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை பிக்பாஸ் புகழ் ராஜுவும், பாவனாவும் தொகுத்து வழங்கினர். இவ்விழாவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து பேசிய இயக்குனர் மிஷ்கின், ‘நடிகை சரிதா மேடம் சிவகார்த்திகேயனை ரஜினி போல் அடக்கமானவர் என என்னிடம் கூறினார்.

Robo Shankar: எவ்வளவு கெஞ்சியும் ஹன்சிகா விடவே இல்லை.. ரோபோ சங்கர் பேச்சால் வெடித்த சர்ச்சை.!

சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரி எல்லாம் இல்லை. ரஜினியேதான் என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின். ஏற்கனவே விஜய், அஜித் அடுத்த சூப்பர்ஸ்டாரா என்ற பஞ்சாயத்து ஓடி வரும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை ரஜினி போல் என மிஷ்கின் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற பஞ்சாயத்து மீண்டும் துவங்கியுள்ளது.

‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். ‘மாவீரன்’ படம் ஜுலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப்படத்தினை தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்கே 21’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘ஜெயிலர்’ பர்ஸ்ட் சிங்கிளுக்காக வேற மாதிரி யோசித்த நெல்சன்: தலைவர் ஆட்டம் ஆரம்பம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.