தமிழ் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவராஜ்குமார்
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் சமீபத்தில் விக்ரம் பிரபு நடித்த 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தை இயக்கிய கார்த்திக் அத்வைத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
'சிவண்ணா எஸ்சிஎப்சி01' என்ற தற்காலிக தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அதிக பொருட்செலவில் வலுவான தொழில்நுட்ப கூட்டணியுடன் உருவாகிறது. 'விக்ரம் வேதா' மற்றும் 'கைதி' புகழ் சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்த படத்தின் மூலம் சாம் கன்னடத்தில் அறிமுகமாகிறார். எஸ்சி எப்சி நிறுவனத்தின் சார்பில் சுதீர் சந்திரா பாதிரி தயாரிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரையில் வெளியிடப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.