உச்ச நீதிமன்ற விடுமுறை காலத்தில் 2,149 வழக்கு விசாரணை

புதுடெல்லி: நீதிமன்றங்களுக்கு ஆண்டுதோறும் 40 நாட்கள் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. ஏற்கெனவே ஏராளமான வழக்குகள் கீழ் மன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஆண்டுதோறும் விடுமுறை அளிப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து நீதிமன்றங்கள் ஜூலை 3-ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளன. எனினும், கோடை விடுமுறையின்போது வழக்குகளை விசாரிக்க பல அமர்வுகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமைத்திருந்தார். அவற்றில் 15-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் கோடை … Read more

'மாமன்னன்' உண்மை கதைனு சொல்றாங்களே சார்.. வந்து விழுந்த கேள்வி.. எடப்பாடி சொன்ன பதிலை பாருங்க..!

சென்னை: மாமன்னன் திரைப்படம் உண்மை கதை என்று சொல்கிறார்களே என நிருபர் கேட்ட கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் சொன்ன பதில்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. மாமன்னன் திரைப்படத்தோடு எடப்பாடி பழனிசாமியையும் இணைத்து சிலர் பேசி வரும் நிலையில், இந்தக் கேள்வி கேட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’ . ஆரம்பத்திலேயே “தேவர் மகன் பார்ட் 2 ” என்று கூறி ஹைப்பை ஏற்றிவிட்டதால் இத்திரைப்படத்துக்கு ஏகப்பட்ட … Read more

Project k: ப்ராஜெக்ட் கே படத்தில் ரஜினியா ?இது என்ன புது கதையா இருக்கு..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மீண்டும் பரபரப்பாக பல படங்களில் நடித்து வருகின்றார். தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படம் அடுத்த மாதம் திரையில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகின்றார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகர்களாக நடிக்கும் இப்படத்தில் மொய்தீன் … Read more

இது தான் ஸ்டாலின்.. "துப்புரவு பணியாளர்கள்.." மாஸ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்

MK Stalin Latest News: ஒப்பந்த துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பிற்காக இதுவரை அவர்களின் ஊதியத்தில் பிடித்து வந்து 50 ரூபாய் இனி அரசே அளிக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக திமுக எம்.பி ஆ. ராசா தகவல் தெரிவித்தார். 

ஆஸ்திரேலிய வீரர்களை கடுமையாக சீண்டிய இங்கிலாந்து ரசிகர்கள் – விசாரணைக்கு உத்தரவு

இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. வெற்றியை தீர்மானிக்கும் நாளாக 5வது நாள் போட்டி இருந்தது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியிருந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் தனி ஒரு ஆளாக களத்தில் இருந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். மறு முனையில் வீரர்கள் யாரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காத போதிலும் அதிரடியாக ஆடி சதமடித்த பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் … Read more

போயபட்டி ரெப்போ படத்தின் தலைப்பு அறிவிப்பு தேதி!

அகண்டா படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் போயபட்டி சீனு இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. தற்போது வரை இப்படத்திற்கு போயபட்டி ரெப்போ என்று தற்காலிக தலைப்பு வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இதில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலா நடித்து வருகிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி … Read more

Maaveeran Trailer – எமனே தவறு செய்தாலும்.. வெளியானது சிவகார்த்திகேயனின் மாவீரன் ட்ரெய்லர்

சென்னை: Maaveeran Trailer (மாவீரன் ட்ரெய்லர்) சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்கள் வரிசையில் இணைந்துவிட்டார். மேலும் சிவகார்த்திகேயனை நம்பி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் போடலாம் என்ற நம்பிக்கையும் கோலிவுட் தயாரிப்பாளர்களிடம் உருவாகியிருக்கிறது. சறுக்கிய பிரின்ஸ்: ஆனால் அந்த நம்பிக்கை … Read more

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்த சரத் பவார்… கட்சியையே உடைத்த அஜித் பவார் – அரசியல் சதுரங்கம்: 2019 முதல் இன்று வரை…

மும்பை, 2019 மராட்டிய தேர்தல்:- மராட்டிய சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 288 தொகுதிகளை கொண்ட மராட்டியத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றி:- தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்றன. தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி சேர்ந்து … Read more

உலக கோப்பை வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ்: காரணம் என்ன ? வெளிப்படையாக பேசிய கேப்டன் ஷாய் ஹோப்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. இதில் இருந்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகள் தேர்வாகும். இந்நிலையில், சூப்பர் 6 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்திற்கான … Read more

உக்ரைன் நடத்தும் எதிர் தாக்குதல் அதிக உயிரிழப்பு ஏற்படலாம் – அமெரிக்க ராணுவ தளபதி

வாஷிங்டன், ரஷிய ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் நடத்தும் எதிா்த் தாக்குதல் மிக நீண்ட காலம் பிடிக்கும் எனவும், அந்த நடவடிக்கையில் அதிக உயிரிழப்பு ஏற்படும் என்றும் அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி மாா்க் மில்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து, வாஷிங்டன் நகரில் நடைபெற்ற செய்தியாளா்கள் அவா் பேசியதாவது, ரஷிய ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்பதற்கான உக்ரைனின் நடவடிக்கைகள் எதிா்பாா்த்ததைவிட மிகவும் மந்தமாக இருப்பதில் ஆச்சர்யபடுவதற்கும் ஒன்றும் எதுவும் இல்லை. இது போரின் இயல்பே ஆகும். எதிா்த் தாக்குதல் … Read more