வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 15 பேர் கடற்படையினரால் கைது

லங்காபடுன, குச்சவேளி மற்றும் திருகோணமலை கடற்பகுதிகளில் 2023 ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது யாழ்ப்பாணம், சளை கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளை மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 15 பேருடன் ஆறு (06) படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை … Read more

அருணாச்சலப்பிரதேசத்தை இணைத்து புதிய வரைப்படம் வெளியிட்ட சீனா… சிவசேனா எம்.பி காட்டமான கேள்வி!

இந்திய – சீன எல்லைப்பகுதியில் இருக்கும் மாநிலம் அருணாச்சலப் பிரதேசம். இந்தியாவின் ஒருங்கிணைத்த மாநிலமாக இருந்தாலும் கூட, சீனாவின் அத்துமீறல் நடவடிக்கையால் பதற்றமான சூழலில் இருக்கும் மாநிலம் அது. இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களுக்கு `தெற்கு திபெத்’ எனப் பெயர் மாற்றம் செய்தது சீனா. சீனாவின் இந்த அறிவிப்புக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்தன. அப்போது பா.ஜ.க அரசு, அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவுடனே இருக்கும் என்ற வார்த்தையை … Read more

சொத்து குவிப்பு வழக்கு | முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது மனைவி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை: சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த அதிமுக ஆட்சியில் 2013-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகள், விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்தை விட 54 சதவீதம் கூடுதலாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் பெயரில் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை ஊழல் தடுப்பு போலீஸாரால் வழக்குப் … Read more

காவிரி ஒழுங்காற்று குழு கூறியபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா

பெங்களூரு: காவிரி ஒழுங்காற்று குழு கூறியபடி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா தெரிவித்துள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 15 நாட்களுக்கு 5000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில அமைச்சர் எம்.பி.பாடீல், “காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால், எங்களிடம் தண்ணீர் இல்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவு … Read more

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வாரம் மழை தான மக்களே: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? முழு விவரம்!

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஆகஸ்ட் 29 ) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, தேனி என … Read more

இன்னும் 2 நாட்களில்… பெங்களூரு KIA விமான நிலையத்தில் பெரிய மாற்றம்… T2க்கு பறக்கும் சர்வதேச விமானங்கள்!

பெங்களூருவில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்ல ஒரே முனையம் (Terminal 1) செயல்பட்டு வந்தது. அதிகப்படியான விமானங்களின் செயல்பாட்டால் தனித்தனி விமான முனையங்களை கட்டமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி Terminal 2 எனப்படும் இரண்டாவது முனையம் கட்டும் முயற்சிகள் தொடங்கின. மொத்தம் 2,55,645 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டாவது விமான முனையம் கட்டமைக்கப்பட்டது. புதிய முனையம் இந்த விமான முனையத்தில் இரண்டு முக்கியமான … Read more

Superstar Rajinikanth : நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே ! அவரு செஞ்ச காரியம் அப்படி !!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரில் பிறந்தவர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னாள் பெங்களூர் போக்குவரத்து கழகத்தில்தான் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். கன்னட நாடகங்களில் நடித்துவந்த ரஜினிகாந்த், இயக்குனர் K. பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின் சில படங்களில் வில்லனாகவும் நடித்தார் ரஜினிகாந்த். இவரின் திறமைக்கு அங்கீகாரமாக தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவரது அயராத உழைப்பினால், சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை … Read more

விஜய்க்கு துரோகம் செய்த திரிஷா? ஒரு போட்டோவால் சிக்கிக்கொண்ட அவலம்!

விஜய் – திரிஷா குறித்த மீம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. விஜய்க்கு திரிஷா துரோகம் செய்துவிட்டதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.  

"என் அறக்கட்டளைக்கு இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம்!" – ராகவா லாரன்ஸ் எடுத்த திடீர் முடிவு!

நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய அறக்கட்டளை மூலம் பல குழந்தைகளுக்கும், மாணவர்களின் கல்விக்கும், ஆதவற்றவர்களுக்கும் உதவி வருகிறார். இதற்காக பிரபல நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், நெருங்கிய நண்பர்கள் எனப் பலரிடம் மனம் திறந்து உதவிகள் கேட்டு அதன் மூலம் பல்வேறு உதவிகள் செய்து வந்தார். பலரும் அவரது அறக்கட்டளைக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தனர். சமீபத்தில் நடந்த ‘சந்திரமுகி-2’ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் லாரன்ஸ் அறக்கட்டளைக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தார். இந்நிலையில், … Read more

புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…

சென்னை: ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல்  சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜி  சார்பில், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து நெஞ்சுவலி என கூறி,  அரசியல்வாதிகளின் புகழிடமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். பின்னர் உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், … Read more