20 நாளா வீட்டுக்கு வரல.. காலையிலேயே லேசா வலி இருந்து இருக்கு.. கதறி அழும் பணிப்பெண்!

சென்னை: காலையிலேயே அவருக்கு லேசா வலி இருந்து இருக்கும்,ஆனால், சொல்லவில்லை என வீட்டில் வேலை செய்யும் பெண் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். கதறி

G20: மனைவியுடன் இந்தியா வந்திறங்கிய ரிஷி சுனக்; `ஜெய் சியா ராம்' என்று வரவேற்ற மத்திய அமைச்சர்!

டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் (செப்டம்பர் 9, 10) இந்தியா தலைமையில் 18-வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. இதன் காரணமாக டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக பலப்படுத்தப்படுகின்றன. இன்னொரு பக்கம், ஜி 20 அமைப்பிலிருக்கும் உலக நாடுகளின் அதிபர்களும், பிரதிநிதிகளும் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றனர். ரிஷி சுனக் – மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே அந்த வரிசையில், இங்கிலாந்தின் பிரதமரான இந்திய வம்சாவளி ரிஷி சுனக், தன் மனைவி அக்‌ஷதா மூர்த்தியுடன் … Read more

”திராவிட மாடல் என்ற சொல்லை கேட்டால் பலருக்கு எரிச்சல் வருகிறது…” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை மலையாளிகள் சங்கத்தின் சார்பில் கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “என்ட பிரியப்பட்ட மலையாள சகோதரர்களுக்கு ஸ்டாலின்ட சிநேகம் நிறைஞ்ச நமஸ்காரம். சில நாட்களுக்கு முன்பு, ஓணம் திருநாளைக் கொண்டாடிய மலையாள மொழிச் சொந்தங்களுக்கு, மலையாளத்தில் என்னுடைய வாழ்த்துகளைச் சொன்னேன். இதற்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் நான் மலையாளத்தில் பேசியிருக்கிறேன். நாம் ஒரே மொழி குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அதாவது … Read more

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் புதுதில்லி ஜி20 உச்சி மாநாடு ஒரு புதிய பாதையை வகுக்கும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: மனித நேயத்தை மையமாகக் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் புதுடெல்லி ஜி20 உச்சிமாநாடு ஒரு புதிய பாதையை வகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றதை அடுத்து, அந்த அமைப்பு சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவாக ஜி20 உச்சிமாநாடு புதுடெல்லியில் நாளை தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் புதுடெல்லிக்கு … Read more

ரஷ்யா-உக்ரைன் போரின் மிகப்பெரிய தாக்குதலை தடுத்து நிறுத்தியது நான்தான்: எலான் மஸ்க்

ரஷ்ய கடற்படை தளத்தை உக்ரைன் தாக்காமல் இருக்க நான் தான் காரணம் என்று தெரிவித்து இருக்கிறார் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். ஒரு வருடத்துக்கும் மேலாக ரஷ்யா -உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு மாஸ்கோ அருகில் உள்ள கருங்கடல் பகுதியில் இணைய வசதியை செயல்படுத்த உக்ரைன் சார்பில் தனக்கு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதன் விளைவை கருத்தில் கொண்டு இணைய வசதியை நான் செயல்படுத்தவில்லை. அப்போது, ஸ்டார்லிங்க் சேவையை செயல்படுத்த … Read more

'பாரதம்' என்று சொன்னாலே பதைபதைத்து போவது ஏன்..? நாராயணன் திருப்பதி கேள்வி

சென்னை: “பாரதம் என்று சொன்னாலே சிலர் பதைபதைத்து போவது ஏன்?” என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார். இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என்று மாற்றுவதற்கு மத்திய அரசு எத்தனித்து வருவதாக கூறப்படுகிறது. பாஜக மூத்த தலைவர்கள் பலரும் இதனை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே சமயத்தில், இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. “இந்தியா என்ற பெயரை மாற்றுவதால் மட்டும் நாட்டின் விலைவாசியும், வேலையில்லா திண்டாட்டமும் … Read more

Marimuthu : என் குடும்பத்தை சந்தோஷமாக வைத்திருக்கிறேன் ! அது போதும் ..

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வந்த மாரிமுத்து இன்று காலை உயிரிழந்தார். 35 வருட சினிமா வாழ்வில் சமீப காலமாதான் தன்னை அனைவரும் அங்கீகரிப்பதாகவும் தனது குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், இப்போது அவரின் மறைவு குடும்பத்திற்கு பெரிய துன்பத்தை ஏற்படுத்தயுள்ளது. நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் RIP Thiru. Marimuthu : … Read more

இன்னிசை தென்றல் தேவாவை களத்தில் இறக்கிய ஜீ தமிழ்! சரிகமப இந்த வார கொண்டாட்டம்

SaReGaMaPa Li’l Champs Season: சரிகமப ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி மூன்றாவது சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது

சச்சினுக்கு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு கோல்டன் டிக்கட்

மும்பை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கட் வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.  தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னையில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. தற்போது பிசிசிஐ இந்தியாவின் தலைசிறந்த நட்சத்திரங்களுக்கு … Read more

ஞானவாபி வழக்கு: ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு அனுமதி | Gnanavabi case: permission to archeology department to conduct survey

வாரணாசி: உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோவிலை ஒட்டி ஞானவாபி வளாகம் அமைந்துள்ளது. இதை, கடந்த 17ம் நுாற்றாண்டில், முகலாய மன்னர் அவுரங்கசீப், இங்கு இருந்த கோவிலை இடித்து, அதன் மீது கட்டியதாக, ஹிந்துக்கள் சிலர் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதையடுத்து, இந்த வளாகத்தில் அறிவியல் பூர்வமாக விரிவான ஆய்வு நடத்தும்படி தொல்லியல் துறைக்கு, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. … Read more