வீடுகளில் நாய் வளர்ப்போருக்கு புதிய விதிமுறைகள்; பெங்களூரு மாநகராட்சி முடிவு

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுஒரு புறம் இருக்க வீடுகளில் நாய்களை செல்லப்பிராணியாக வளர்ப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களால் அண்டை வீட்டாருடன் தகராறு, மோதல், கொலை சம்பவங்களும் நடந்துள்ளது. மேலும் சிலர் நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்தும் வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், நாய் வளர்ப்போருக்கு புதிய … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்வதேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்..!!

நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் (ரஷியா) ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார். இதில் முதல் செட்டை இழந்த மெட்வதேவ் பின்னர் எழுச்சி பெற்று அடுத்தடுத்த செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் மெட்வதேவ் 2-6, 6-4, 6-1 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் … Read more

வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவரை சேதப்படுத்திய 2 பேர் கைது

பீஜிங், சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 13-ம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவரின் 32-வது பகுதி கலாசார நினைவு சின்னங்களில் ஒன்றாக தற்போது உள்ளது. 4 ஆயிரம் மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான ஒன்று. கடந்த 1987-ம் ஆண்டு சீன பெருஞ்சுவர் ஆனது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய … Read more

ஆசிய கிண்ணப் போட்டியில்; இன்று இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன

இலங்கை பங்கேற்கும் 2023 ஆசிய கிண்ணத்தின் முதல் சுற்றின் இரண்டாவது போட்டி இன்று (05) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற உள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் பகல் மற்றும் இரவு போட்டியாக பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் எளிதாக நுழைந்துவிடும். லாகூர் மைதானத்தில் இலங்கை அணி பல வெற்றிகளை பெற்றுள்ளதுடன், அந்த மைதானத்தில் முன்னதாக இலங்கை அணி பங்குபற்றிய 13 போட்டிகளில் 9ல் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்: `தேவையா… தேவையில்லையா?' – மக்கள் கூறுவதென்ன? | விகடன் கருத்துக்கணிப்பு

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் வாக்கில் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த ஆண்டின் இறுதி அல்லது தொடக்கத்தில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், ஒரே நேரத்தில் மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தும் விதமாக `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை, வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பா.ஜ.க அரசு அமல்படுத்தப்போவதாகக் கூறப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் – மோடி `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மூலம், தேர்தல் … Read more

நாட்டுவெடியால் வாய் சிதறி பெண் யானை உயிரிழப்பு: கோவையில் தொடர்கதையாகும் நிகழ்வுகள்

கோவை: நாட்டுவெடியை கடித்ததால் வாய் சிதறி கோவையில் பெண் யானை உயிரிழந்துள்ளது வன உயிரின ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட தடாகத்தை அடுத்த எண்.24 வீரபாண்டியில் உள்ள தனியார் செங்கள் சூளை அருகே இன்று (செப்.5) காலை வனப்பணியாளர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காட்டு யானை ஒன்று படுத்துகிடப்பது கண்டறியபட்டு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இதையடுத்து, வனக்கால்நடை மருத்துவர்கள் அங்கு வந்து யானையை பரிசோதனை செய்ததில், வாயில் காயம் இருப்பது கண்டறியப்பட்டது. அது, … Read more

'பாரத்' விவகாரம்: வெளியுறவுத் துறை கருத்து தெரிவிக்க மறுப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவரின் அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என உள்ளது குறித்து கருத்து தெரிவிக்க வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். உச்சி மாநாடு தொடங்கும் 9-ம் தேதி இரவு விருந்தை குடியரசுத் தலைவர் … Read more

"பயமா.. எனக்கா..?" எங்க பரம்பரையை பத்தி தெரியாது போல.. அண்ணாமலையை வறுத்தெடுத்த சீமான்

சென்னை: விஜயலட்சுமி புகார் கொடுத்ததால் சீமான் பயந்துவிட்டார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறயதற்கு காட்டமாக பதிலளித்திருக்கிறார் சீமான். மேலும், தங்கள் பரம்பரைக்கே பயம் என்றால் என்னவென்றே தெரியாது என்றும் அவர் கூறியிருக்கிறார். தன்னை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிரடியாக புகார் அளித்தார். மேலும், மகளிர் நீதிமன்றத்திலும் தனது குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களையும், வாக்குமூலத்தையும் அளித்திருக்கிறார் விஜயலட்சுமி. இதில் … Read more

தெலுங்கானாவில் இம்முறை காங்கிரஸ் ஆட்சிதான்… அடித்து சொல்லும் உத்தம் குமார் ரெட்டி!

தெலுங்கானாவில் கே சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்திற்கு வரும் டிசம்பர் மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 119 தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் 60 இடங்களை கைப்பற்றினாலே அந்த கட்சி ஆட்சியமைக்கும் உரிமையை பெறும். தற்போது சந்திர சேகரராவ் 100 எம்எல்ஏக்களுடன் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளார். சமீபத்தில்தான் வேட்பாளர்களை அறிவித்தார் … Read more

'ஜெயிலர்' பார்மூலா.. 'தலைவர் 170' படத்தில் பாகுபலி வில்லன்.?: ரஜினியின் அதிரடி முடிவு.!

‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது பல மடங்கு எகிறியுள்ளது. இந்தப்படம் குறித்து தினமும் வேறலெவல் தகவல்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது லேட்டஸ்டாக ‘தலைவர் 170’ படம் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த மாதம் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மரண மாஸ் படமாக ரிலீசான ஜெயிலரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விட்டனர். கன்னட சூப்பர் … Read more