புதுடில்லி, உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ரவீந்திர பட், 64, நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.
நீதிபதி ரவீந்திர பட், புதுடில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக, 2004ல் நியமிக்கப்பட்டார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, 2019ல்பதவியேற்றார்.
அதன்பின், உச்ச நீதிமன்ற நீதிபதியாக, 2019 செப்., 23ல் பொறுப்பேற்ற ரவீந்திர பட், நான்கு ஆண்டு பதவி காலத்தில் 100க்கும் மேற்பட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இந்நிலையில், நேற்றுடன் அவர் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
சமீபத்தில் ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க மறுத்த அரசியலமைப்பு சட்ட அமர்விலும் இவர் இடம்பெற்றிருந்தார்.
இதேபோல் 2019ல் கல்வி மற்றும் அரசு பணியிடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கிலும் ரவீந்திர பட் தீர்ப்பு அளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement