சென்னை இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வானிலை ஆய்வு மையம் இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, 18-ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரை வழியே கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் […]