Bigg Boss Tamil 7 Eviction: இந்த வாரம் ஐஷு தான் அவுட்.. லீக்கானது உறுதியான தகவல்.. நிக்சன் பாவம்!

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறைவான ஓட்டுக்களை வாங்கி பூர்ணிமா ரவி கடைசி இடத்தில் இருந்த நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஐஷு எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அமீரின் சகோதரியான ஐஷு அமீர் மற்றும் பாவனி பண்ண ட்ரிக்கையே பிக் பாஸ் வீட்டில் பயன்படுத்தி கடைசி வரை இருக்க பிளான் போட்டாரா

கழிவுநீர் தேக்கமாகும் காலிமனைகள்: தொற்றுநோய் அபாயத்தில் மடிப்பாக்கம், பல்லாவரம்

சென்னை: மடிப்பாக்கம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள காலிமனைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் அச்சத்தில் அப் பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில் மடிப்பாக்கம் ராம்நகர், சதாசிவம் நகர், புழுதிவாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளன. மிக வேகமாக வளர்ந்து வரும் இப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையின் முக்கிய பகுதி என்பதால் பலர் இங்கு காலி மனைகளை வாங்கி வைத்துள்ளனர். அவற்றை சம்பந்தபட்ட உரிமையாளர்கள் முறையாக … Read more

22.23 லட்சம் அகல் விளக்குகள்: கின்னஸ் சாதனை படைத்த அயோத்தி தீபோற்சவம்!

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 22.23 லட்சம் விளக்குகள் தீபோற்சவ நிகழ்வை முன்னிட்டு ஒளிர்விக்கப்பட்டது. இது கின்னஸ் உலக சாதனையாகவும் அமைந்துள்ளது. 14 ஆண்டுகால வனவாசத்தை முடித்துக் கொண்டு ராமர், சீதை மற்றும் லட்சுமணன் அயோத்தி திரும்பியதாக சொல்லப்படும் வழக்கத்தின் காரணமாக அயோத்தியில் தீபோற்சவ விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு வழக்கம் போலவே தீபோற்சவம் நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற அயோத்தி தீபோற்சவ விழாவில் 15.76 லட்சம் விளக்குகள் … Read more

பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் (www.Patrikai.Com) செய்தி இணையதளத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.  இந்த  நந்நாளில் அனைவரது இல்லங்களிலும் வாழ்விலும் அன்பின் ஒளி பரவட்டும், அனைவரின் வாழ்விலும்  பட்டாசுகள் போல  துன்பங்கள், கவலைகள் சிதறி, ஆசைகளும், கனவுகளும் நிறைவேறி  இனிப்புகளைப் போல மகிழ்ச்சி மலரட்டும்..                                                  … Read more

கல்யாணத்தில் முடியும் காதல் : காளிதாஸ் ஜெயராம் – தாரிணி நிச்சயதார்த்தம்

மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல ஆண்டுகளாக நடித்து வரும் சீனியர் நடிகர் ஜெயராம். அவரும் மலையாள நடிகை பார்வதியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு காளிதாஸ் என்ற மகனும், மாளவிகா என்ற மகளும் இருக்கிறார்கள். 30 வயதான காளிதாஸ் தமிழில் 'ஒரு பக்க கதை, விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 'இந்தியன் 2, தனுஷ் 50' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவரும் மாடலிங் பெண்ணான தாரிணி காளிங்கராயரும் கடந்த … Read more

Thala Deepavali: தீபாவளி… 'தல' தீபாவளி.. பிரபலங்கள் கொண்டாடும் தல தீபாவளி!

சென்னை: புதிதாக திருமணமான ஜோடிகள், இதுவரை எத்தனையோ தீபாவளியை கொண்டாடினாலும் திருமணத்திற்குப் பின்னர் தங்கள் துணையுடன் கொண்டாடும் முதல் தீபாவளியை மறக்கவே முடியாது. திருமணத்திற்கு முன்பு எத்தனையோ தீபாவளியை பெற்றோர்களுடனும், உறவினர்களுடன் கொண்டாடி இருப்பார்கள். ஆனால், துணையோடு கொண்டாடும் இந்த தீபாவளி ரொம்ப ஸ்பேஷல். அப்படி சிறப்பான தல தீபாவளியை கொண்டாடும் திரைப்பிரபலங்களுக்கு வாழ்த்து சொல்லாம் வாங்க.

முழு கொள்ளளவை நெருங்கிய வைகை அணையில் உபரி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தேனி: வைகைஅணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளவை நெருங்கியுள்ளதால் அணைக்கு வரும் நீர் அனைத்தும் உபரியாக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்பாசனத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையினால் கடந்த சில வாரங்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகை, முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி, வரட்டாறு, பாம்பனாறு உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் வைகைஅணையின் நீர்மட்டம் வெகுவாய் உயர்ந்து, கடந்த 8-ம் … Read more

‘காங்கிரஸின் குணமே ஊழல் நிறைந்தது’ – பிரதமர் மோடி குறித்த விமர்சனத்துக்கு பாஜக பதிலடி

புதுடெல்லி: “காங்கிரஸ் கட்சியின் சொந்த குணாதிசயமே ஊழல் நிறைந்தது” என்று பாஜக விமர்சித்துள்ளது. பிரதமரின் குணாதிசயம் குறித்த ஜெய்ராம் ரமேஷின் பேச்சுக்கு பாஜக இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரங்களின்போது, நக்சல் தீவிரவாதத்தின் மீது அனுதாபம் கொண்ட காங்கிரஸ், ஊழலை மன்னிக்கும் கட்சி என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக வெள்ளிக்கிழமை பேசியிருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமரை கடுமையாக தாக்கியிருந்தார். அவர் … Read more

ஓட்டுநர்கள் பேருந்துகளைக் கவனமாக ஓட்ட முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேருந்துகளைக் கவனமாக இயக்க வேண்டும் என ஓட்டுநர்களை அறிவுறுத்தி உள்ளார்.  இன்று அதிகாலை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு விரைவு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்து 63 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத்துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதாவது ஓட்டுநர்கள் பேருந்துகளை … Read more