நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆஜராக அவகாசம்: உயர் நீதிமன்றத்தில் என்ஐஏ உத்தரவாதம்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிக்கு பிறப்பித்த சம்மனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பிப்.5-ம்தேதி விசாரணைக்கு ஆஜராகஅவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விவகாரத்தில் சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. யூடியூபில் வீடியோ: துப்பாக்கி தயாரிப்பது குறித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரு பொறியியல் பட்டதாரிகள் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்திருந்தது. சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் … Read more

இஸ்ரேலில் ரூ.1.4 லட்சம் சம்பளத்தில் வேலை செய்ய உயிருக்கு பயப்படாமல் வரிசையில் நிற்கும் பல மாநில கட்டிட தொழிலாளர்கள்

ரோதக்: இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், காசா மீது போர் தொடுத்துள்ளது இஸ்ரேல். மேலும், இஸ்ரேலில் பணியாற்றிய பாலஸ்தீன தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டது. இதனால். அங்கு கட்டிடதொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய தொழிலாளர்களை இஸ்ரேல் தேர்வு செய்கிறது. இதற்கான ஆட்கள் தேர்வு ஹரியாணாவின் ரோதக் நகரில் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஹரியாணா, பஞ்சாப், உ.பி, பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லியை … Read more

‘லவ்வர்’ படம் இந்த சமூகத்திற்கு அவசியம் சொல்லப்படவேண்டிய கதை – மணிகண்டன்!

Lover Movie: அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி நடித்துள்ள  லவ்வர் பிப்ரவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.  

கள்ளுக்கடை, 5 மொழி கொள்கை வரும்…. டாஸ்மாக் படிப்படியா குறைப்போம் – அண்ணாமலை வாக்குறுதி

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 5 மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் அமல்படுத்தபடும் என கூறியுள்ளார் அண்ணாமலை. மீண்டும் கள்ளுக்கடை திறப்போம் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.    

FASTag பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆர்பிஐ!

Paytm நிறுவனத்திற்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. வரும் பிப்ரவரி 29க்குப் பிறகு, பேடிஎம் தொடர்பான சேவைகள் நிறுத்தப்படும் என்று கூறி உள்ளது. அதன்படி, பேடிஎம் வாலட்கள், FASTag போன்ற சேவைகளில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.  மேலும் அதன் வாடிக்கையாளர்கள் அவர்களது பேடிஎம் கணக்கில் டெபாசிட் அல்லது டாப் அப் செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி புதன்கிழமை தெரிவித்தது. ஆர்பிஐ-யின் இந்த நடவடிக்கை Paytm-ன் அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி உள்ளது.  … Read more

டில்லியில்  பாஜக – ஆம் ஆத்மி மோதலை தவிர்க்க 200க்கும் அதிகமானோர் கைது

டில்லி டில்லியில் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினரிடையே மோதலை தவிர்க்க இரு கட்சியைச் சேர்ந்த 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்..  அண்மையில் சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வாக்குச்சீட்டில் தேர்தல் அதிகாரி எதையோ எழுதுவது போன்ற வீடியோ காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. சண்டிகர் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. மேயர் தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதாகக் கூறி பா.ஜ.க.வை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி … Read more

சிம்பு 48ல் இரண்டு சிம்பு…! – போஸ்டர் வைரல்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். கமல் தயாரிக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. நாயகியாக தீபிகா படுகோனே அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என கூறப்படுகிறது. வரலாற்று படமாக ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இதற்காக சிம்பு நீண்ட தலைமுடியை வளர்த்துள்ளார். அதோடு பல தற்காப்பு கலைகளையும் கற்று வருகிறார். நாளை(பிப்., 3) சிம்புவின் பிறந்தநாள். இதையொட்டி இன்று இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். … Read more

Ex-Malaysia Prime Ministers sentence halved | மலேஷிய முன்னாள் பிரதமர் தண்டனை பாதியாக குறைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோலாலம்பூர்: ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் தண்டனைக் காலம், 12 ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் பிரதமராக நஜீப் ரசாக், கடந்த 2009ல் பதவியேற்றார். அந்நாட்டு பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக, 1 எம்.டி.பி., என்ற பெயரில் மலேஷிய மேம்பாட்டு நிறுவனத்தை, அப்போது அவர் நிறுவினார். அரசின் முதலீட்டு நிறுவனமான இதன் நிதியை, அவர் … Read more

Simbu Net worth: கோலிவுட் இளவரசன் சிம்பு பிறந்தநாள்.. 41 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?

சென்னை: இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கும் உஷாவுக்கும் மகனாக 1983ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி பிறந்த சிம்பு என்கிற சிலம்பரசன் டி.ஆர். இன்று தனது 41வது பிறந்தநாளை எஸ்டிஆர் 48 படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி கொண்டாடி வருகிறார்.   நடிகர், பாடகர், சிறந்த நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் என