'தமிழக வெற்றி கழகம்' : நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கினார்

சென்னை : நடிகர் விஜய், அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயரிட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத … Read more

திருமணம் வேண்டாம்னு சொன்ன சாய்பல்லவி? தங்கையின் கணவர் யார் தெரியுமா? பிரபலம் பகிர்ந்த தகவல்!

சென்னை: தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவரின் தங்கை பூஜாவிற்கு அண்மையில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், பூஜாவின் காதலன் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவரும் நிலையில், இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார். கோயம்பத்தூரை பூர்வீகமாக கொண்ட சாய் பல்லவி, விஜய்

Gaza War: காஸாவில் 27,000-ஐ கடந்த இறப்பு எண்ணிக்கை… தொடரும் போர்க் கொடூரம்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நான்கு மாதங்களாகப் போர் நடந்து வருகிறது. ஐ.நா சபையில் 153 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாத இஸ்ரேல், தொடர்ந்து போர் நிகழ்த்திவருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவளித்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து போன்ற உலக நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராகக் கண்டனங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. காஸா பாதுகாப்பற்ற இடங்களில் பிளாஸ்டிக் கவர்களால் கூடாரங்களை அமைத்து பாலஸ்தீனக் குடிமக்கள் தங்கிவருகிறார்கள். மத்திய காஸாவிலுள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் மைதானத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் முகாமிட்டிருக்கிறார்கள். கடும் … Read more

நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை: என்ஐஏ தகவல் @ உயர் நீதிமன்றம்

சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு எதிராக சட்டத்துக்குட்பட்டே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. துப்பாக்கி தயாரிப்பது குறித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரு பொறியியல் பட்டதாரிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்தது. சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியது. … Read more

வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: சுமார் 19 பேர் காயம் @ இமாச்சல்

சோலன்: இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரப்படி இதில் சுமார் 19 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல். சோலன் மாவட்டத்தின் கீழ் உள்ள ஜார்மஜ்ரி பகுதியில் உள்ள நலகரில் செயல்பட்டு வந்த வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. … Read more

பட்ஜெட் விலையில் லாவா யுவா 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் லாவா ‘யுவா 3’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா யுவா 3 … Read more

சீதா ராமன் அப்டேட்: ராமை வெறுப்பேற்றும் சீதா.. ராஜசேகரிடம் சிக்கும் ஆதாரம்

Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Vijay: "விஜய் அரசியலுக்கு வரட்டும் ஆனால்… !" – திருப்பூர் சுப்ரமணியன் பேட்டி

நடிப்பிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார் நடிகர் விஜய். முழுநேர அரசியல்வாதியாகக் களமிறங்கப்போவதால், அவரின் இந்த அறிவிப்பில் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டிருப்பது அவரின் திரைப்பட ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். கொரோனா காலங்களில்கூட தியேட்டருக்கு மக்கள் வருவதற்கே அச்சப்பட்டுக்கொண்டிருந்தபோது, குடும்பம் குடும்பமாக வரவைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு நிம்மதி பெருமூச்சைக் கொடுத்தது ‘மாஸ்டர்’ படம். இந்தநிலையில், விஜய்யின் இப்படியொரு அறிவிப்பு குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய … Read more

நெல் விலை 40% உயர்ந்ததை அடுத்து அரிசி விலை கிடுகிடுவென கிலோவுக்கு ரூ. 12 உயர்வு

தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சந்தையில் நெல் விலை 40 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 2000 முதல் 2200 வரை விற்ற 75 கிலோ பிபிடி ரக நெல் மூட்டை விலை தற்போது ரூ. 2800 வரை விற்கப்படுகிறது. இது நான்கு மாதங்களுக்கு முன்பு ரூ. 2500 ஆக இருந்தது. சரியான காலத்தில் பருவ மழை பெய்யாததும் ஒரு சில மாவட்டங்களில் போதுமான மழை பெய்யாததாலும் … Read more

நிதியை தராமல் இழுத்தடிப்பதா.. சீறிய மம்தா பானர்ஜி! மத்திய அரசை கண்டித்து 2 நாட்கள் தர்ணா

கொல்கத்தா: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரிர மத்திய அரசை கண்டித்து, 48 மணி நேர தர்ணா போராட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிகக் கடுமையாக Source Link