மயிலாடுதுறை: முதல்வர் ஸ்டாலின் கொடுத்த நிவாரணம் காசோலையை திருப்பி கொடுத்தது ஏன் என்பது குறித்து மீனவர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். மயிலாடுதுறையில் மார்ச் 4ந்தேதி நடைபெற்ற அரசு விழாவில், மீனவர்களுக்கு இழப்பீடாக வழங்குவதாக அறிவித்திருந்த ரூ. 5லட்சத்துக்கு பதிலாக ரூ. 2 லட்சம் காசோலை மட்டுமே வழங்கியதற்கு பூம்புகாரை சேர்ந்த மீனவர் ரமேஷ், முதலமைச்சர் ஸ்டாலினிடம் விழா மேடையிலேயே புகார் அளித்தார். பின்னர், தனக்கு வழங்கப்பட்ட காசோலையை, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் மேடையிலேயே திருப்பி கொடுத்தார். இது […]