TVK: சென்னையில் 16 தொகுதிகளில் தவெக முன்னிலை; 'திமுக கோட்டை'யில் ஸ்டாலின், உதயநிதியின் நிலவரம் என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் ஓட்டுக்களில் தி.மு.க முன்னிலையில் இருந்து வந்த சூழலில் வாக்கு இயந்திரங்களை எண்ணத் தொடங்கியதும் அதிரடியாக த.வெ.க வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

குறிப்பாக தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் த.வெ.க வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருகிறார்கள்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் – திமுக

குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தபால் ஓட்டுக்களில் முன்னிலையில் இருந்தார். அதன்பிறகு நடந்த அடுத்தடுத்த சுற்றுக்களில் மு.க.ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்தார். அந்தத் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு முன்னிலை வகித்து வருகிறார்.

அதைப் போல துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க வேட்பாளர் செல்வம் முன்னிலையில் இருந்து வருகிறார்.

இதுதவிர சென்னையில் உள்ள 16 தொகுகளிலும் த.வெ.க முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் தி.மு.க அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்பட 31 அமைச்சர்களும் பின்னடைவிலிருந்து வருகிறார்கள்.

காலை 9.30 மணி நிலவரப்படி த.வெ.க 85 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. அடுத்து அ.தி.மு.க கூட்டணி 65 தொகுதிகளில் உள்ளது மூன்றாவது இடத்தில் தி.மு.க கூட்டணி உள்ளது. த.வெ.க முன்னிலையில் இருப்பதால் அந்தக் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.