GOAT: விஜய்யின் படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் என்ன? த்ரிஷா படங்களின் லைன்-அப்!

சினிமாவில் 22-வது ஆண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார் த்ரிஷா. ‘மௌனம் பேசியதே’வில் அறிமுகமாகி, இப்போது வெள்ளி விழா ஆண்டை நோக்கி முன்னேறி வருகிறார் த்ரிஷா.

அறிமுகமான வருடங்களில் இருந்து இப்போது வரை பல ஆண்டுகளாக கதாநாயகியாகவே கோலோச்சி வரும் நாயகி த்ரிஷாதான் என்றால் அதில் மிகையில்லை. விஜய்யின் ‘லியோ’வை அடுத்து கமல், அஜித், சிரஞ்சீவி, டொவினோ தாமஸ் என டாப் ஹீரோக்களின் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

த்ரிஷா

இந்நிலையில் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) படத்தில் கெஸ்ட் ரோலில் த்ரிஷா நடிக்கிறார் எனத் தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. ‘லியோ’ முடித்த கையோடு அஜித்தின் ‘விடா முயற்சி’யில் இணைந்தார் த்ரிஷா. அதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் சில ஷெட்யூல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இதற்கிடையே மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் ‘ஐடென்டிட்டி’ என்ற படத்தில் கமிட் ஆனார்.

‘லியோ’வில்

அதன் படப்பிடிப்பும் சில ஷெட்யூல்கள் முடிவடைந்திருக்கின்றன. ‘விடா முயற்சி’ படப்பிடிப்பில் இருக்கும் போதுதான் மணிரத்னம், கமல் கூட்டணியின் ‘தக் லைஃப்’ படத்தில் கமிட் ஆனார் த்ரிஷா. இதன் படப்பிடிப்பு செர்பியாவில் நடந்துவருகிறது. ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்குப் பிறகு மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் த்ரிஷ்.

அஜித்தின் படப்பிடிப்புக்கு இடைவெளி விட்டிருப்பதாகவும், அடுத்த மாதம் அதன் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடரும் என்பதாலும், இடையே கிடைத்த நேரத்தில் சிரஞ்சீவி படத்திற்கும் சென்றுவிட்டார் த்ரிஷா. தெலுங்கில் சிரஞ்சீவியின் ஜோடியாக ‘விஷ்வம்பரா’வில் நடித்துவருகிறார். ‘பிம்பிசாரா’ படத்தை இயக்கிய மல்லிடி வசிஷ்டா இயக்கிவரும் படமிது. இதன் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது.

மணிரத்னத்துடன் த்ரிஷா

இதற்கிடையே விஜய்யின் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறார் என்றும், அதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். தவிர அந்தப் படத்தில் கேங்க்ஸ்டர் குருப்பில் கேமியோ ரோலிலும் நடித்துள்ளார் என்கிறார்கள். இது தவிர, வெப்சீரீஸ் ஒன்றிலும் நடித்து முடித்துவிட்டார் த்ரிஷா. ஓ.டி.டி-க்கு ரெடியான ‘பிருந்தா’ வெப்சிரீஸில் அவர் போலீஸாக நடித்துள்ளார். இதன் சீசன் ஒன்றின் படப்பிடிப்பு சென்ற ஆண்டே நிறைவடைந்துவிட்டது. அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஒரு பக்கம் மும்முரமாக நடந்துவருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.