தாமரைச் சின்னத்தில் களம் இறங்கப் போகிறதா ஓ.பி.எஸ் அணி?!

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ், தனி அணியாக செயல்பட்டு வந்தார். அதிமுக-வின் கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவையை பயன்படுத்தி வந்த ஓ.பி.எஸ் தரப்புக்கு, நீதிமன்றம இடைக்கால தடை விதித்ததால், கட்சியின் வேட்டியைகூட கட்டமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் ஓ.பி.எஸ்.

மோடி ஓபிஎஸ்

இருப்பினும், பாஜக-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்த ஓ.பி.எஸ், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று திடமாக சொல்லிக் கொண்டு இருந்தார்.

இந்நிலையில்தான், சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவையை ஓ.பி.எஸ் இனி பயன்படுத்தவே கூடாது என்று நிரந்தர தடை விதித்து இருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

இதனால், பா.ஜ.க-வின் சின்னத்தில் ஓ.பி.எஸ் போடும் வேட்பாளர்கள் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பேச்சு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ஓ.பி.எஸ் தரப்பில் கேட்டபோது, “பாஜகவுடன்தான் கூட்டணி என்பது உறுதியாகிவிட்டது. அதன்படி, அந்த கூட்டணியில் 3 சீட் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே பாஜக தரப்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம் செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஓபிஎஸ் – அதிமுக

ஆனால், ஓ.பி.எஸ்தான் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு இருப்பதால், அந்த சின்னம் கிடைக்கும் என்று சமாளித்துக் கொண்டு இருந்தார். தற்போது இரட்டை இலை சின்னம் கிடைக்க இனி வாய்ப்பே இல்லை என்று உறுதியாகிவிட்டது.

எனவே, பா.ஜ.க மீண்டும் தாமரையில் களமிறங்க நிர்பந்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள். தாமரையில் நிற்பது பிரச்னையில்லை. அப்படி இன்னோரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால், அந்த கட்சியின் உறுப்பினர் அட்டை வாங்கவேண்டும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், அதிமுகவுக்கு ஓ.பி.எஸ்-ஸால் உரிமை கொண்டாடவே முடியாதநிலை ஏற்பட்டுவிடும்.

ஓபிஎஸ்

அதற்காகதான் ஓ.பி.எஸ் தயக்குங்கிறார். எனவேதான், தனது வேட்பாளர்களுக்கு தனிச்சின்னத்தில் போட்டியிட ஓ.பி.எஸ் முடிவு செய்திருக்கிறார். ஆனால், தனிச்சின்னத்தை இனி பிரபலப்படுத்தி, தேர்தலை சந்திப்பது பின்னடைவை தரும் என்று பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது. முடிவு ஓ.பி.எஸ் கையில்தான் இருக்கிறது. ” என்றனர் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.