சென்னை தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஏறத்தாழ தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தாமரை சின்னத்தில் ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன. அதாவது, 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன. இன்று கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட […]
