சென்னை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழகத்தில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவித்துள்ளார். தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம், “திருச்சி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 18ம் தேதிக்குள் தபால் வாக்குக்களைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை வாங்க முதல்முறை வீடுகளுக்குச் செல்லும்போது வாக்காளர்கள் வீட்டில் இல்லை […]