பதிலடி கொடுக்குமா இந்தியா ? 3-வது ஆக்கி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடன் இன்று மோதல்

பெர்த்,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே 1-5, 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இதனால் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஆட்டம் பெர்த்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

முந்தைய ஆட்டங்களில் ஆஸ்திரேலிய வீரர்களின் வேகமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய அணியினர் திணறியதுடன், தடுப்பு ஆட்டத்திலும் கோட்டை விட்டனர். அந்த தவறுகளை சரி செய்து பதிலடி கொடுக்க இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும். அதே நேரத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் தொடரை வசப்படுத்த ஆஸ்திரேலியா ஆர்வம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.