பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பாரீசில் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. தொடக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு இடம் பெற்றன. அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை அரங்கேறும் இந்த போட்டியில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 22 விளையாட்டுகளில் 549 பந்தயங்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது. பாராஒலிம்பிக்கில் … Read more

‘‘ஆப் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யும்போது பிரச்னை வருமா..?”

”என்னிடம் ஒரு பழைய புல்லட் இருக்கிறது. அதை நான் பல ஆண்டுகளுக்கு முன் 50,000 ரூபாய்க்கு வாங்கினேன். அதை யார் இப்போது அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறீர்கள்?” இப்படி ஒருவர், ஒரு கூட்டத்தில் கேட்டால்… என்ன மாதிரியான பதில்கள் வரும்? வந்தவை… ஆச்சர்யப்படத்தக்க பதில்களே! நாணயம் விகடனும் ஆம்ஃபி அமைப்பும் சேர்ந்து ‘முதலீடுகளும் நீங்களும்’ என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆகஸ்ட் 17-ம் தேதி ஈரோட்டிலும், ஆகஸ்ட் 18-ம் தேதி திருப்பூரில் நடத்தின. அதில், இந்தக் கேள்வி, … Read more

பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

மதுரை: சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “டிஎஸ்பி காதர்பாட்ஷா தொடர்ந்த வழக்கில் டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத … Read more

ஜன்தன் திட்டத்தின் 10-ம் ஆண்டு: 53+ கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ஜன்தன் யோஜனா தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்திட்டத்தின் மூலம் 53 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏழைகள் பலர் வங்கிக் கணக்கு இன்றி இருந்த நிலையில் அனைவரும் வங்கிக் கணக்கை தொடங்குவதற்காக கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜன்தன் திட்டத்தைத் தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் மினிமம் பேலன்ஸ் இன்றி வங்கிக் கணக்கை பராமரிக்க முடியும். இதன்மூலம், கோடிக்கணக்கான இந்தியர்கள் முறையான … Read more

மதுபானக் கொள்கை வழக்கில் நீதி வெல்லும் : ஜாமீனுக்கு பின் கவிதா பேட்டி

டெல்லி டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா ஜாமீனுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகளான எம் எல் ஏ கவிதாவை டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். சிபிஐ அதிகாரிகளும் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட கவிதாவை … Read more

Ajithkumar: 234 கி.மீ வேகத்தில் பறக்கும் அஜித்குமார்.. அசால்ட்டாக ஒற்றைக் கையில் கார் ஓட்டுறாரே!

சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது ஷெக்ட்யூல்ட் நடைபெற்று வருகின்றது. ஒரு நாளுக்கு 21 மணி நேரம்

“அண்ணாமலை போன்ற படித்தவர்கள் அரசியலுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” – துரை வைகோ

திருச்சி: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போன்ற படித்தவர்கள் அரசியலுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. மதிமுகவை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை என்பதுதான் நிலைப்பாடு. மற்றபடி, மூன்றாவது மொழியாக, சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை தான் படிக்க வேண்டும் என்று திணிப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. … Read more

திரிணமூல் காங்கிரஸ் நிறுவன நாள் – “கொல்லப்பட்ட மருத்துவ மாணவிக்கு அர்ப்பணிக்கிறேன்” – மம்தா பானர்ஜி

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் நிறுவப்பட்ட தினத்தை ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவ மாணவிக்கு அர்ப்பணிப்பதாக அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் நிறுவன தினத்தை முன்னிட்டு மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சில நாட்களுக்கு முன்பு ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் துயரமான முறையில் கொல்லப்பட்ட எங்கள் சகோதரிக்கு இன்று திரிணமூல் காங்கிரஸ் நிறுவன தினத்தை அர்ப்பணிக்கிறேன். கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு மரணமடைந்த அந்த சகோதரியின் … Read more

57 ஆம் முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சென்னை முன்னாள் அமைசர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 57 ஆம் முறையாக நீட்டிக்கபட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  த்னக்கு ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தன. இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். … Read more