நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் மழையுடனான காலநிலை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 செப்டம்பர் 04ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 செப்டம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் … Read more

“பா.ஜ.க வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தி.மு.க கூட்டணியில் தொடர்கிறேன்!”

பா.ஜ.க-வுடன் தி.மு.க காட்டிவரும் இணக்கம், சர்ச்சையான முருகன் மாநாடு, தி.மு.க கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடு உள்ளிட்ட கேள்விகளுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகனைச் சந்தித்தேன்… “எல்லோரும் முருகன் மாநாட்டின் தீர்மானங்களை விமர்சித்துக்கொண்டிருக்கும்போது, நீங்களோ ‘மாநாடு நடத்தியதே தவறு’ என்கிறீர்களே ஏன்?!” “மதச்சார்பற்ற கொள்கையைப் பேசி, அனைத்து மதத்தினரின் வாக்குகளையும் பெற்று ஆட்சி அமைத்த தி.மு.க அரசு, இப்போது முருகருக்கு மாநாடு நடத்தியதை நான் எதிர்க்கிறேன். மதச்சார்பற்ற அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் தலைமையில் இப்படியான … Read more

பாராலிம்பிக்ஸில் சாதித்த இந்தியர்களை பாரிஸ் சென்று வாழ்த்திய வானதி சீனிவாசன்!

கோவை: பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று சாதித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யஸ்ரீ ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர். பாரிஸ் நகரில் தமிழக வீராங்கனைகள் உள்ளிட்ட பாராலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளை … Read more

கர்நாடக அரசை கவிழ்க்க மீண்டும் ஆபரேஷன் தாமரை?  – காங். எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்படுவதால் சித்தராமையா அதிர்ச்சி    

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். இந்நிலையில், சித்தராமையா மீது பழங்குடியினர் நல வாரிய ஊழல், மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் விதிமுறை மீறல் ஆகிய பிரச்சினைகளால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஒருவேளை சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால், யாரை முதல்வராக நியமிப்பது என காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியுள்ளது. இதேபோல … Read more

ஆந்திர வெள்ள பாதிப்பு : ஹெலிகாப்டர் மூலம் உணவு, குடிநீர் விநியோகம்

விஜயவாடா ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கபப்ட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்துள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ரயில் சேவை, போக்குவரத்து பாதிக்கப்பட்டு மின்சாரமும் துண்டிக்கப்பட்ட நிலையில், வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளுக்குள்ளேயும் மொட்டை மாடிகளிலும் தங்கும் நிலை ஏற்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் … Read more

Amala paul: ரொம்ப போர் அடிக்குதாம் அமலா பாலுக்கு.. காலை பிடித்துவிட்ட கணவர்.. கியூட்!

சென்னை: நடிகை அமலா பால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து வருகிறார். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் தொடர்ந்து நடிப்பு, தயாரிப்பு உள்ளிட்ட தளங்களில் பயணிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவரது நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான ஆடுஜீவிதம் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஏஎல் விஜய்யுடனான பிரிவிற்கு பிறகு

ரொபோ தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு – 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி

தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7500 ஆசிரியர்களை 3 கட்டங்களின் கீழ் Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தின் மூலம் பயிற்றுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை நடாத்துவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனமான Skills College of Technology (SCOT CAMPUS) நிறுவகத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய, … Read more

Nivin Pauly `முழுக்க முழுக்கப் பொய் குற்றச்சாட்டு…' – பாலியல் புகார் குறித்து நிவின் பாலி

233 பக்கங்களைக் கொண்ட ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானப் பிறகு பல நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதி தொடர்பாக வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த அறிக்கை மலையாளத்தை தாண்டி அனைத்து பகுதியிலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. வாய்ப்புகள் கொடுப்பதாகக் கூறி சக நடிகைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த புள்ளிகளின் பெயர்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது நடிகர் நிவின் பாலி மீதும் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி … Read more

பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய 100 கிலோ எடை கொண்ட யானை திருக்கை மீன்!

ராமேசுவரம்: ராமேசுவரத்துக்கு அருகில் உள்ள பாம்பனில் நாட்டுப்படகு மீனவர் வலையில் சுமார் நூறு கிலோ எடை கொண்ட ராட்சத யானைத் திருக்கை மீன் இன்று (செப்.3) சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து நேற்று 80க்கும் மேற்பட்ட படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு மீனவரின் வலையில் ராட்சத யானைத் திருக்கை மீன் ஒன்று சிக்கியது. அதை இன்று காலை கரைக்கு கொண்டு … Read more

தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்ட மத்திய அமைச்சர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

சென்னை: பெங்களூருவில் ராமேஸ்வரம் உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பின்போது தான் பேசிய பேச்சுக்காக மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, இந்த ஆண்டு மார்ச் மாதம் பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது ஊடகங்களிடம் தெரிவித்த கருத்து, தமிழர்கள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக சென்னை உயர் … Read more