இனி மகாகும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள்  கிடையாது : யோகி உத்தரவு

பிரயாக்ராஜ் உபி  முதல்வர் யோகி ஆதித்ய நாத் இனி கும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் வழங்கப்பட மாட்டாது என உத்தரவிட்டுள்ளார். தற்போது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் அமாவாசையை ஒட்டி நேற்று புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். இதுவரை 25 பேரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், காயமடைந்த 60 பேரில், 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் … Read more

Mahindra Veero CNG truck – ரூ.8.99 லட்சத்தில் வந்துள்ள மஹிந்திரா வீரோ சிஎன்ஜி டிரக்கின் சிறப்பம்சங்கள்

சிஎன்ஜி மற்றும் டீசல் என இரண்டிலும் மஹிந்திரா வீரோ இலகுரக டிரக் விற்பனைக்கு கிடைக்கின்றது.

Mana Mitra: இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்… வாட்ஸ்அப் போதும்; ஆந்திர அரசின் புது திட்டம்

பொதுமக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் இருந்த இடத்திலிருந்தே அரசு சேவைகளைப் பெரும் வகையில், வாட்ஸ்அப் கவர்னன்ஸ் (WhatsApp Governance) என்ற முறையில் புதிய திட்டத்தை ஆந்திர அரசு இன்று (ஜனவரி 30) தொடங்கியிருக்கிறது. பொதுச் சேவைகளை மக்கள் எளிதில் அணுகும் வகையில் விரிவுபடுத்துவதற்காக `மன மித்ரா (Mana Mitra)’ என்று பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி மெட்டாவுடன் (Meta) மாநில அரசு ஒப்பந்தம் போட்டதைத் தொடர்ந்து, கொண்டுவரப்பட்டிருக்கிறது. WhatsApp … Read more

கால்வாயில் கைகளால் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியாளர்கள்! – வேலூர் அதிர்ச்சி

வேலூர்: வேலூரில் நிக்கல்சன் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள் கைகளால் கழிவுகளை அகற்றும் பணி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் நகரில் உள்ள நிக்கல்சன் கால்வாய் முழுவதும் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் இயந்திரங்களை பயன்படுத்தியும் தூர்வாரி வருகின்றனர். கால்வாய் தூர்வாரும் பணியின் ஒரு பகுதியாக கால்வாயின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை முழுமையாக … Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம்

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டம் நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டிடத்தில் இன்று நடந்தது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, ஜெ.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் எல்.முருகன் ஆகியோரின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், கே.சுரேஷ் மற்றும் கவுரவ் கோகய், திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.பி.க்கள் சுதிப் பந்தியோபாதியா மற்றும் டெரிக் ஒ பிரைன், ஆர்எஸ்பி எம்.பி. பிரேமச்சந்திரன், பிடிஜே எம்.பி. சஸ்மித் பத்ரா, … Read more

கஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க சிம்பிளான 6 பயிற்சிகள்

Weight loss | நீங்கள் கஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்கள் என்றால் சிம்பிளான இந்த 6 பயிற்சிகளை செய்தால் போதும்

“ஒவ்வொரு முறையும் அடிகளும், வலிகளும்தான்; பிரச்னை வந்துகிட்டே இருக்கு..'' -வருந்தும் சமுத்திரக்கனி

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘திரு.மாணிக்கம்’. இப்படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் சமுத்திரக்கனி தனது படங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசியிருந்தார். இதுதொடர்பாக பேசிய அவர், “ இந்தப் படம் பொருளாதார ரீதியாக சம்பாதித்ததா? என்றால் நிச்சயமாக இல்லை. என்னுடைய தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான்.  உலகம் முழுவதும் இந்தப் படம் சென்றடைந்துவிட்டது. ஆனால் … Read more

நான் மகாகும்பமேளாவில் நீராடவில்லை : நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு

சென்னை நடிகர் பிரகாஷ் ராஜ் கும்பமேளாவில் தான் புனித நீராடவில்லை  எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நாத்திக கருத்துக்களைப்  பேசி வரும் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. இதை பார்த்த பலரும் நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் புனித நீராடி இருக்கிறீர்களே? உங்களை என்ன சொல்வது? என்று கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் பதிவுகள் வெளியிட்டனர்.  இ … Read more

Skoda Auto india celebrates 25 years – இந்தியாவில் 25 ஆண்டுகளை கொண்டாடும் ஸ்கோடா ஆட்டோ..!

2021 ஆம் ஆண்டு MQB A0–IN பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் மாடலாக குஷாக் எஸ்யூவி வெளியானது.

“சந்தானம் அதைச் சொன்னப்போ அழுதுட்டேன்"- நெகிழும் `லொள்ளு சபா' சாமிநாதன்

நடிகர் லொள்ளு சபா சாமிநாதன் மகள் ஐஸ்வர்யா திருமணம் கும்பகோணத்தில் நடந்து முடிந்திருக்கிறது. நடிகர்கள் வையாபுரி, காளி வெங்கட் உள்ளிட்ட சிலர் அதில் கலந்து கொண்டனர். ‘சிம்பிளா முடிச்சிட்டீங்களே, சினிமா நண்பர்கள் எல்லாரும் கோவிச்சுக்க மாட்டாங்களா?’ எனக் கேட்டு சாமிநாதனுக்கு போனைப் போட்டோம். ”சார் எனக்கு சொந்த ஊர் கும்பகோணம் பக்கத்துல ஒரு கிராமம். நடிக்கறதுக்காக சென்னை வந்து இங்கேயே செட்டில் ஆகிட்டேன். இருந்தாலும் தொடர்ந்து நாலு நாள் பிரேக் கிடைச்சா குடும்பத்தோட ஊருக்குக் கிளம்பிடுவேன். ஆயிரம் இருந்தாலும் அங்க கிடைக்கிற … Read more