`அதிஷி தனது தந்தையையே மாற்றிவிட்டார்' – பாஜக வேட்பாளர் மீண்டும் சர்ச்சை… அழுத டெல்லி முதல்வர்

ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலிக்கெதிராக வகுப்புவாத கருத்துகளைப் பேசி சர்ச்சையை ஏற்படுத்திய அப்போதைய பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி, “கல்காஜி தொகுதியில் பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போல மென்மையான சாலைகள் அமைத்துத் தருவேன்” என நேற்று முன்தினம் சர்சையைக் கிளப்பினார். டெல்லி பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ் பிதுரி இந்த சர்ச்சை ஓய்வதற்குள், டெல்லி முதல்வர் … Read more

சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் விடுவிப்புக்கு எதிரான மறுஆய்வு மனு: தீர்ப்பை தள்ளி வைத்தது ஐகோர்ட்

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 3.92 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்குப் பதியப்பட்டது.இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன் … Read more

“நாடு முழுவதும் ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் ஏறக்குறைய 100%-ஐ எட்டுகிறது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேநே்திர மோடி, நாடு முழுவதும் ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் ஏறக்குறைய 100%-ஐ எட்டி இருப்பதாகக் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி, இன்று காணொலிக் காட்சி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்ததோடு பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர், கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு … Read more

பட்ஜெட் விலையில் ரெட்மி 14C 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களை கருத்தில் கொண்டு இது அறிமுகமாகி உள்ளது. சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய … Read more

விடாமுயற்சி அவுட்-குட் பேட் அக்லி இன்! படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..

Good Bad Ugly Release Date : அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படம் தள்ளிப்போடப்பட்ட நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Good Bad Ugly: `3 மாத இடைவெளியில் இரண்டு அஜித் படங்கள்' – குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் `விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாவதாக முன்பு அறிவித்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் பிற்போடப்படுவதாக லைகா நிறுவனம் கடந்த ஜனவரி 1-ம் தேதி அறிவித்திருந்தது. `குட் பேட் அக்லி’ திரைப்படமும் முன்பு பொங்கல் பண்டிக்கைக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்திருந்தார்கள். ஆனால், பிறகு அத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது `குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். ஏப்ரல் 10-ம் தேதி `குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. Good Bad … Read more

கங்கனா ரணாவத் நடிக்கும் எமெர்ஜென்சி பட டிரெய்லர் வெளியீடு

மும்பை நடிகை கங்கனா ராணாவ்த் இந்திரா காந்தியாக நடிக்கும் எமெர்ஜென்சி பட  டிரெய்லர் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும்  ‘எமர்ஜென்சி’. படத்தில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்து படத்தை அவரே இயக்கியும் உள்ளார். இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கவுசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் … Read more

அப்படிப்பட்ட வீரர்கள் இந்தியாவுக்கு தேவையில்லை – சுனில் கவாஸ்கர் ஆதங்கம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இதனால் 10 வருடங்களுக்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா இழந்துள்ளது. அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 3-வது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற கனவும் முடிவுக்கு வந்தது. சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்தியா, தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் தோல்வியை தழுவியதால் டெஸ்ட் … Read more

காசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் 184 பேர் பலி

காசா, இஸ்ரேல் – காசாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நீண்டகாலமாக மோதல்போக்கு நிலவி வந்தது. இதனையடுத்து 2023-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பணய கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.இந்த போரில் இதுவரை சுமார் 45 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் அதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் இரு … Read more

TN Assembly: "எமெர்ஜென்சியை நினைவூட்டுகிறது… இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல" – ஆளுநர் மளிகை

தமிழ்நாடு சட்டமன்றத்தின், இந்த ஆண்டின் முதல் கூட்டம் இன்று (ஜனவரி 6) தொடங்கிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி, ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாகியிருக்கிறது. இதுகுறித்து, ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தளப் பக்கத்தில், தேசிய கீதம் இசைக்குமாறு சபாநாயகரிடமும், முதல்வரிடமும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்ததாகவும், அது மறுக்கப்பட்டதால் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என அவர் … Read more