கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி 18 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் … Read more

பெங்களூருவில் பிப்.10 முதல் 14 வரை ‘ஏரோ இந்தியா 2025’ கண்காட்சி!

புதுடெல்லி: ஆசியாவின் மிகப் பெரிய 15-வது விமானக் கண்காட்சியான – ஏரோ இந்தியா 2025 – கர்நாடகாவின் பெங்களூருவில் பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆசியாவின் மிகப்பெரிய 15-வது விமானக் கண்காட்சியான – ஏரோ இந்தியா 2025 – கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும். ‘ஒரு பில்லியன் … Read more

சென்னையில் HMPV வைரஸ்… 2 குழந்தைகளுக்கு பாதிப்பு… மக்களே ஜாக்கிரதை!

HMPV Virus Tested In Chennai: சென்னை சேத்துப்பட்டு மற்றும் கிண்டி தனியார் மருத்துவமனைகளில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வசந்த மாளிகை: “பல ஜென்மங்கள்ல நடிகையாக முடியாம இறந்துபோயிருப்பேன்'' – வாணிஶ்ரீ உருக்கம்

மறுபடியும் ரீ ரிலீஸாகி சிவாஜி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ‘வசந்த மாளிகை’ திரைப்படம். அந்த நாள் நினைவுகளை எங்களுடன் ஷேர் செய்துகொள்ள முடியுமா மேம் என்றோம், ‘வசந்த மாளிகை’யின் நாயகி வாணிஶ்ரீயிடம். ”கோயில்ல இருந்து வீட்டுக்கு வந்தவுடனே போன் பண்ணட்டுமா” என்றவர், சொன்ன மாதிரியே அடுத்த அரை மணி நேரத்தில் போன் செய்தார். வாணிஶ்ரீ வசந்த மாளிகை வாய்ப்பு எப்படி வந்தது மேம்? வசந்த மாளிகை படத்துல நான் புக் ஆகுறப்போ எனக்கு 17 வயசு. படம் … Read more

ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் அறிமுகம்… விலை…. சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விபரங்கள்

ரியல்மி 14 ப்ரோ சீரிஸ்: இந்தியாவில் Realme 14 Pro, Realme 14 Pro+ 5G அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீன நிறுவனத்தின் இந்த புதிய சீரிஸ், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Realme 13 Pro தொடரை விட மேம்பட்ட மாடலாக இருக்கும். இந்தத் தொடரில் கிடைக்கும் இரண்டு போன்களின் தோற்றமும் வடிவமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். இருப்பினும், தொலைபேசியின் அம்சங்களில் வேறுபாடுகள் காணப்படலாம். போனின் சில அம்சங்கள் குறித்த தகவல்களை நிறவனம் கூடுதலாக, நிறுவனம் … Read more

வங்கதேச நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு இரண்டாம் கைது வாரண்ட்

டாக்கா வங்கதேச நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு ஈர்ண்டாம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. வங்காதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பு தலைமையில் நடைபெற்ற போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சி தலைவர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர்களால் நடத்தப்பட்ட கிளர்ச்சியின் … Read more

டெல்லியில் அடர்பனி சூழல்; ரெயில்கள் காலதாமதம்

புதுடெல்லி, டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் அடர்பனியான சூழல் நிலவுகிறது. பல்வேறு இடங்களிலும் பனி மூட்டம் காணப்படுகிறது. கடும் பனியால் குளிரான காலநிலையும் உள்ளது. இதனால், காலையில் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் வந்தே பாரத், ஷதாப்தி மற்றும் ஹம்சபர் உள்ளிட்ட ரெயில்கள் காலதாமதத்துடன் இயங்குகின்றன. பல்வேறு நகரங்களில் இருந்து டெல்லிக்கு சென்று சேரும் ரெயில்களும் பல மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரெயில் பயணிகள் பாதிப்புக்குள்ளானார்கள். … Read more

147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த பாபர் அசாம் – ஷான் மசூத் ஜோடி

கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 615 ரன்களும், பாகிஸ்தான் 194 ரன்களும் அடித்தன. இதனையடுத்து பாலோ ஆன் ஆன நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதன் மூலம் … Read more

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் பலி

காசா, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போரில் காசாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இன்னும் போரின் தாக்கம் குறையவில்லை. இதனால் பலர் தெற்கு காசாவில் உள்ள பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இந்த நிலையில், காசாவில் 100க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 12 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: `18 மீதான குண்டர் சட்டம் ரத்து!' – சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தியதால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், மாநில அளவில் பெரும் பிரச்னையாக வெடித்தது. இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் என அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த அரசு, வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், 18 பேர் கைதுசெய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்! மறுபக்கம், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு … Read more