Nesippaya: "விஜய் டிவில ரூ.4500 சம்பளம் வாங்குனப்ப என் மாமனார்…" – சிவகார்த்திகேயன் ஓப்பன் டாக்

‘நேசிப்பாயா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோதான் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 3) சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பங்கேற்றிருந்தார். Nesippaya இசைவெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “ஆகாஷ் உங்களுக்கு சினிமாவில சாதிக்கணும்னு … Read more

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில்  இன்று நடைபெற்ற  நிகழ்ச்சியில் பழனியில் கடந்த ஆண்டு முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது தொடர்பாக,  முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலரை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை சார்பில்,   தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில்,   உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக … Read more

தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள்; 6 கிலோ தங்கம் பறிமுதல்

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து விமான நிலையத்தில் அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது, விமான நிலைய ஊழியர்களிடமும் சோதனை நடைபெற்றது. அப்போது, விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 2 பேர் தங்கத்தை கடத்தி வர முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடமிருந்து … Read more

சிட்னி டெஸ்ட்: மருத்துவமனை சென்ற பும்ரா.. களத்தில் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி

சிட்னி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பண்ட் 40 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்களில் … Read more

மேகங்கள் மீது நின்ற ஏலியன்கள்? வீடியோ வைரல்

வாஷிங்டன், இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் செல்போன் பயன்படுத்தப்படும் நிலையில் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக எது வித்தியாசமாக நடந்தாலும் உடனே வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுவிடுகிறார்கள். அது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இந்நிலையில் ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் நிலையில் தற்போது மேகங்களில் மனிதர்கள் போன்ற சில உருவங்கள் நிற்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேகங்களில் நிற்பவர்கள் ஏலியன்கள் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ … Read more

ED: “தமிழ்நாட்டில் Tent போட்டு தங்கிடுறாங்க'' -அமலாக்கத்துறை சோதனை குறித்து ஜோதிமணி சொல்வதென்ன?

அமலாக்கத்துறை சோதனை குறித்து ஜோதிமணி பேசியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கரூர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜோதிமணி தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று கரூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி ஜோதிமணியிடம் அமலாக்கத்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஜோதிமணி அதற்கு பதிலளித்த அவர், அமலாக்கத்துறை தமிழகத்திற்கு வருவது புதிய விஷயம் கிடையாது. … Read more

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா? – கே.பாலகிருஷ்ணன் கேள்வி

விழுப்புரம்: “பாஜக – ஆர்எஸ்எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள்போராடி வருகிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு நேற்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து மாலையில் விழுப்புரம் நகராட்சித் … Read more

குழந்தைகள் சமூக ஊடக கணக்குகளை உருவாக்க பெற்றோரின் ஒப்புதல் அவசியம்: மத்திய அரசு

புதுடெல்லி: 18 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்க பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு நேற்று வெளியிட்ட டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்புச் சட்டம் 2023 வரைவு விதியில் இந்த முன்மொழிவை வைத்துள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், வரைவு விதிகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் மீதான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் அரசின் MyGov.in.என்ற தளத்தில் பிப்ரவரி 18, 2025-க்கு முன்பாக … Read more

தமிழ்நாடு அரசின் இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி..! தொழில் முனைவோருக்கு சூப்பர் சான்ஸ்

Tamil Nadu Government | தொழில்முனைவோருக்கு தேவையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்குகிறது. அதில் கலந்து கொள்வது எப்படி என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

What to watch on Theatre and OTT: பயாஸ்கோப், சீசா, Marco – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

பயாஸ்கோப் (தமிழ்) பயாஸ்கோப் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சத்தியராஜ், சேரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பயாஸ்கோப்’. சினிமா பற்றி அறிமுகம் இல்லாத கிராமத்தினர் ஒன்று கூடி ஒரு சினிமா எடுக்கிறார்கள் என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் நேற்று (ஜன.3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. சீசா (தமிழ்) சீசா குணா சுப்பிரமணியம் இயக்கத்தில் நட்டி, நிஷாந்த் ரூசோ, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீசா’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஜன.3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. … Read more