அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: திமுக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில்,  தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் படுவதாக வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. தற்போதைய தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடந்த 2006 – 2011 காலகட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. … Read more

சீனாவில் புதிய வகை வைரஸ் பரவல்? இந்தியாவில் தொடர்ந்து கண்காணிப்பு – மத்திய அரசு

புதுடெல்லி, சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதனால் பலர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது.கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் அதை மறந்து வரும் நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன. இந்த புதிய வைரஸ் ‘ஹியுமன் மெடா நியூமோ வைரஸ்’ (எச்.எம்.பி.வி.) என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் சீனாவில் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது … Read more

5-வது டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் ஆஸி. 181 ரன்களில் ஆல் அவுட்

சிட்னி, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. மோசமான பேட்டிங்கால் கடும் விமர்சனங்களை சந்தித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா தாமாகவே முன்வந்து இந்த டெஸ்டில் விளையாடாமல் ஒதுங்கினார். இதனால் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றார். ரோகித் சர்மாவுக்கு பதிலாக சுப்மன் கில்லும், முதுகில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்புக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவும் இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் ஒரே … Read more

துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து கோர விபத்து – 28 பேர் பலி

துனிஷ், ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது அவர்கள் பெரும்பாலும் கடல் மார்க்கமாக படகுகளில் செல்ல முற்படுகின்றனர். இதில் பல பயணங்கள் ஆபத்தில் முடிந்து விடுகின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் இவ்வாறு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று துனிசியா, ஐரோப்பாவை அடையும் நோக்கில் 2 படகுகள் கடலில் பயணம் செய்தன. இரண்டு படகுகளில் மொத்தம் 110 பேர் பயணம் … Read more

ஹூண்டாய் க்ரெட்டா EV முன்பதிவு துவங்கியது.!

ஜனவரி 17 ஆம் தேதி வெளியாக உள்ள க்ரெட்டா எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது. 4 விதமான வேரியண்டில் 10 விதமான நிறங்கள் பெற்று 18 விதமான வகைகள் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே க்ரெட்டா இவி பேட்டரி, ரேஞ்ச் உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களையும் ஹூண்டாய் வெளியிட்டுள்ளதால் புக்கிங் துவங்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி மாத மத்தியில் விநியோகம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாப் வேரியண்டில் உள்ள  51.4kWh பேட்டரி பெறுகின்ற லாங் … Read more

`பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கிறோம்’ – வானதி சீனிவாசன்

புதுச்சேரி பா.ஜ.க-வின் நிர்வாக அமைப்புத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் மற்றும் மாநில நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்தார். அப்போது 2026 சட்டப்பேரவை தேர்தல் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது தலைவராக இருக்கும் செல்வகணபதி சரியாக செயல்படவில்லை என்றும், அவரை மாற்ற வேண்டும் என்றும் கட்சியின் … Read more

முதல்வர் காப்பீட்டு திட்ட நிதி குறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் ஆய்வு

சென்னை: முதல்வர் காப்பீட்டுத் திட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வை துறை ரீதியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 44 துறைகளில் மொத்தம் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தினமும் சுமார் 450 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். இவை தவிர பிற மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக … Read more

வட இந்தியாவில் 2-வது நாளாக தொடரும் அடர் பனி மூட்டம்: டெல்லியில் விமான போக்குவரத்து பாதிப்பு

புதுடெல்லி: வட இந்தியாவின் சில பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்றும் அடர்ந்த பனி மூட்டம் நிலவியது. இதனால் டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து டெல்லி சர்வதேச விமான நிறுவனம் (DIAL) அதிகாலை 12.05 மணிக்கு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அடர் பனி மூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகளின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணைகளை பயணிகள் தெரிந்து கொள்ள சம்மந்தப்பட்ட விமான நிறுனங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” … Read more

கரோனாவை போல் தாக்கத்தை ஏற்படுத்துமா சீனாவில் பரவும் புதிய வைரஸ்? – நிபுணர்கள் சொல்வதென்ன!

சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவல் என்ற செய்தி வந்தவுடனேயே உலக சுகாதார நிறுவனம் தொடங்கி உலக நாடுகள் வரை அனைத்தும் பரபரப்பாகி தொற்று தொடர்பான தகவல்களைத் தேடத் தொடங்கியுள்ளன. இந்தத் தேடலும், அதன் கூடவே ஒட்டிக் கொண்ட பதற்றமும் இயல்பே என்று சொல்லும் அளவுக்கு கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் பதிவான கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கோடிக் கணக்கில் உயிரிழப்புகள், சர்வதேச அளவில் பொருளாதார பின்னடைவு … Read more

Nesippaya: "இளையராஜாவின் குணம்.. நா.முத்துக்குமார் காம்போ.." – யுவன் குறித்து சிவகார்த்திகேயன்

‘நேசிப்பாயா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் யுவன் சங்கர் ராஜா குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோதான் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 3) சென்னையில் நடைபெற்றது. nesippaya அந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் … Read more