பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து தவறான தகவலை பரப்புவதா? – அண்ணாமலைக்கு அமைச்சர் கண்டனம்

பேரிடர், வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தராமல், தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து தவறான தகவல்களைக் கூறி மக்களை குழப்புகிறார் என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறி்த்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்று அறிவித்ததை சுட்டிக்காட்டி தொடர்பற்ற கேள்வியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுப்பியுள்ளார். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், தேர்தல் … Read more

‘‘மகாராஷ்டிராவில் 5 மாதங்களில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு?’’ – தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் கேள்வி

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 5 மாதங்களில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே ) எம்பி சஞ்சய் ராவத், தேசிய மாநாட்டுக் கட்சி – சரத் பவார் பிரிவு எம்.பி சுப்ரியா சுலே உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் தலைவர்களுடன் இணைந்து ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தேர்தல் ஆணையத்திடம் உள்ள மகாராஷ்டிரா வாக்காளர் … Read more

பத்திரப்பதிவு அலுவலகங்கள் தைப்பூச தினத்தன்று வழக்கம்போல் செயல்படும் : தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் தைப்பூச தினத்தன்று வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது “அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதால் அரசு பொது விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் சில மங்களகரமான நாட்களில் பொது மக்களால் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்திட அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளளது. அதன் அடிப்படையில் வருகின்ற … Read more

ஒன் பை டூ

செ.கிருஷ்ணமுரளி சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க “உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார்… அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பட்டியலின மக்களுக்குப் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனாலும், அரசியல் செய்ய வேண்டும் என்று எடுத்ததற்கெல்லாம் கண்டன அறிக்கை, போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்வதை வழக்கமாகவே வைத்திருந்தார் திருமாவளவன். இப்போது ஸ்டாலின் தலைமையிலான இந்தப் போலி திராவிட மாடல் அரசில், என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார் திருமா. இந்த நிலையில், ‘வேங்கைவயல் விவகாரத்தில் அ.தி.மு.க எதுவுமே செய்யவில்லை’ என்று பொய் பேசும் திருமா, முதலில் அவர்கள் என்ன … Read more

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களின் கல்வி சான்றுகள் ரத்து: அமைச்சர் தகவல்

அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உண்மை தன்மையை ஆராய்ந்து ஆசிரியர்கள் பணி நீக்கம் மட்டும் செய்யப்படாமல், அவர்களின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 60-ம் ஆண்டு வைர விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அரசு பள்ளியின் 60-ம் … Read more

‘நொறுக்குத் தீனி’ நுகர்வு அதிகரிப்பு: கடும் கடுப்பாடுகளுக்கு பாஜக எம்.பி வலியுறுத்தல்

புதுடெல்லி: கடந்த சில வருடங்களாக செறிவற்ற நொறுக்குத் தீனி உட்கொள்ளும் கலாச்சாரம் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள பாஜக எம்.பி. சுஜீத் குமார், பாக்கெட்களில் அடைக்கப்பட்டு வரும் உணவுகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள், அதிக வரிகள் விதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் இந்தப் பிரச்சினையை எழுப்பிய ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்.பி., “உப்பு, சர்க்கரை, தீங்கிழைக்கும் கொழுப்பு, அதேநேரத்தில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள நொறுக்கு தீனி உட்கொள்ளும் கலாச்சாரம் ஆபத்தான அளவில் அதிகரித்து வருகிறது. கடந்த … Read more

சென்னையில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள் : ஒரே மாதத்தில் ரூ. 8 லட்சம் அபராதம்

சென்னை சென்னை நகரில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள் குறித்து ஜனவரியில் மட்டும் ரூ. 8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் 5,900 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் திகழ்ந்திடும் வகையில் அனைத்து போக்குவரத்து மற்றும் உட்புறச் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள … Read more

ரயிலில் கொடூரம்: கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட இளைஞர் கைது – என்ன நடந்தது?

ஜோலார்​பேட்டை / சென்னை: ரயிலில் கர்ப்​பிணிக்கு பாலியல் தொந்​தரவு அளித்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிய இளைஞர் கைது செய்​யப்​பட்​டார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ஜெமினி (41). இவரது மனைவி ரேவதி (36). தையல் கலைஞர்​களான இவர்​கள், திருப்​பூரில் உள்ள பனியன் நிறு​வனத்​தில் பணிபுரிந்து வருகின்​றனர். மேலும், திருப்​பூரிலேயே வீடு எடுத்து தங்கி​யுள்​ளனர். தற்போது ரேவதி கர்ப்​பிணியாக உள்ளார். இந்நிலை​யில், மருத்​துவப் பரிசோதனைக்காக சித்தூர் சென்ற ரேவதி, கோவை​யில் இருந்து ஜோலார்​பேட்டை வழியாக திருப்பதி … Read more

வாக்குச்சாவடி வாரியாக வாக்குப் பதிவு தரவுகளை தேர்தல் ஆணையம் பதிவேற்றவில்லை: கேஜ்ரிவால் சாடல்

புதுடெல்லி: பலமுறை கோரிக்கை விடுத்தும், படிவம் 17சி மற்றும் வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் தரவுகளை தேர்தல் ஆணையம் தமது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்ற மறுத்துவிட்டது என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் தனது எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், “படிவம் 17சி மற்றும் அனைத்து தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாங்குகளின் விபவங்களை பதிவேற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. ஆம் ஆத்மி … Read more