2026-ல் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்: நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழக முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் 2026 தேர்தலில் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று உறுதிபட தெரிவித்தார். திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் சோலார் ஆலைகளை தொடங்கி வைத்தபின் திருநெல்வேலி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.11.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தாமிரபரணி ஆற்றின் … Read more

2022 முதல் தலைவர் இல்லாமல் இயங்கும் தேசிய பசுநல அமைப்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த 2022 முதல் தலைவர் இல்லாமல் மத்திய அரசின் தேசிய பசு நல அமைப்பு, தலைவர் இல்லாமல் இயங்குகிறது. இந்த தகவலை நேற்று நாடாளுமன்ற மக்களவையில் எழுந்த கேள்விக்கானப் பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தார். பசுக்கள் மற்றும் அவற்றின் சந்ததியினரின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனை அமைப்பாக ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் (ஆர்கேஏ-தேசிய பசுநல அமைப்பு) உள்ளது. இது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான … Read more

2027 ஆம் வருடம் சந்திரயான் 4  ஏவப்படும் : மத்திய அமைச்சர் அறிவிப்பு

டெல்லி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வரும் 2027 ஆம் வருடம் சந்திரயான் 4 ஏவப்படும் என்று  தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  தனது சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரயான் -4 திட்டத்தில் மும்முரமாக இறங்கியுள்ளது. சந்திரயான் 4 எனபது நிலவுக்கு சென்று அதன் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் கற்களை எடுத்து வருவதற்கான திட்டம் ஆகும். மத்திய அமைச்சரவை  இத்திட்டத்துக்குஒப்புதல் அளித்து 2,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. சந்திரயான்-4 … Read more

திருமணத்தில் தகராறு; மீசை, தலை முடியை வெட்டிய குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் அபராதம் -நடந்தது என்ன?

திருமணத்தில் ஏற்பட்ட தகராறால், மணமகன் வீட்டாரின் மீசை, தலை முடியை மழித்ததற்காக ஒரு குடும்பத்திற்கு 11 லட்சம் அபராதம் விதித்து மகா பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ளூர் தலைவர்களின் தலைமையில் கூடும் கூட்டம் தான் மகா பஞ்சாயத்து என்பர். கிராமத்தில் ஏதேனும் ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த பஞ்சாயத்து முடிவு எடுக்கும். அந்த வகையில் ஒரு குடும்பத்திற்கு 11 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது மகா பஞ்சாயத்து. … Read more

வைகை நதியில் கழிவுநீர் கலப்பு: மதுரை உட்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: வைகை நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை உட்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த நாகராஜன், உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: வைகை ஆறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது. தேனி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை நதியில் கழிவுநீர் கலக்கிறது. … Read more

இந்தியர்களை கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா – மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்

புதுடெல்லி: நாடு கடத்தப்படும் இந்தியர்கள், எந்த வகையிலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்படுகிறோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார். மேலும், அமெரிக்க ராணுவத்தால் இந்தியர்கள் கைவிலங்குடன் நாடு கடத்தப்பட்டது குறித்தும் அவர் விரிவாக விளக்கம் அளித்தார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருந்ததாகக் கூறி 104 இந்தியர்களை அந்நாட்டு அரசு தனது ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நேற்று திருப்பி அனுப்பியது. கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் அழைத்து … Read more

வில்லிவாக்கம் பேருந்து நிலையம் தற்காலிக மூடல்… மெட்ரோ ரயில் பணிக்காக பேருந்து நிறுத்தம் வேறு இடங்களுக்கு மாற்றம்…

சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு 20, 22, 23V, 27D, 47, 47A, 63, S43, S44 ஆகிய 9 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப் பணிகளுக்காக வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தை தற்காலிகமாக மூட மாநகர போக்குவரத்துத் துறை தீர்மானித்துள்ளது. மாதவரம் மில்க் காலனி முதல் கோயம்பேடு, போரூர், ஆலந்தூர், வேளச்சேரி வழியாக சோழிங்கநல்லூர் வரை … Read more

Amit shah-க்கு நெருக்கடி தரும் STALIN-ன் All India Move… டெல்லி ஸ்கெட்ச்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில், தமிழ்நாட்டில் தளம் அமைக்க வேண்டும் என அமித்ஷா மூன்று முக்கியமான பிளானை வகுத்துக் கொடுத்துள்ளார். அதை முறியடிக்க கூடிய வகையில் மூன்று முக்கியமான அஸ்திரங்களை ஏவியுள்ளார் ஸ்டாலின். அதில் ஒன்று யுஜிசி விவகாரம். வொர்க் அவுட் ஆகுமா ஸ்டாலினின் டெல்லி மு வ்? அமித் ஷா-வின் ஆபரேஷன் தமிழ்நாடு வெல்லுமா?!  முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.  Source link

“பொது மக்களின் பிரச்சினைகளை பரிவோடு கேட்பீர்!” – பதக்கங்களை வழங்கி காவல் ஆணையர் அருண் அறிவுரை

சென்னை: பொது மக்களின் பிரச்சினைகளை போலீஸார் பரிவோடு கேட்டு தீர்த்து வைக்க வேண்டும் என, முதல்வர் காவலர் பதக்கங்களை வழங்கி காவல் ஆணையர் அறிவுரை வழங்கினார். தமிழக காவல் துறையில் 10 ஆண்டுகள் மெச்சத் தகுந்த வகையில், தண்டனைகளின்றி பணிபுரிந்த போலீஸாருக்கு தமிழக முதல்வரால் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று முதல்வரின் காவலர் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் 3,000 போலீஸாருக்கு பதக்கங்கள் வழங்க பொங்கல் தினத்தன்று தமிழக அரசால் அரசாணை … Read more

“இதை அனுமதித்தது ஏன்?” – ‘இந்தியர்களுக்கு கைவிலங்கு’ விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு பிரியங்கா கேள்வி

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் குறித்து கடுமையாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி பிரியாங்கா காந்தி, “இப்படி நடக்க ஏன் அனுமதித்தீர்கள்?” என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து வயநாடு எம்.பி பிரியங்கா கூறுகையில், “பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் நல்ல நண்பர்கள் என பல விஷயங்கள் சொல்லப்பட்டன. இவ்வாறு நடக்க பிரதமர் அனுமதித்தது ஏன்? அவர்களைத் (நாடு கடத்தப்பட்டவர்கள்) திரும்ப … Read more