இன்று நெல்லையில் போக்குவரத்து மாற்ற,ம்

நெல்லை தமிழக முதல்வரின்  வருகையால் நெல்லையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்சிகளில் கலந்து கொள்ள திருநெல்வேலிக்கு வருகை தருகிறார். இதைமுன்னிட்டு திருநெல்வேலி மாநகர பகுதிகளில் இன்று (6.02.2025ஆம் தேதி) கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ”கன்னியாகுமரி-மதுரை 4 வழிச்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுவழியில் கொங்கந்தான்பாறை ரிலையன்ஸ் பல்க், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர் தாழையூத்து ரோடு வழியாக மதுரை செல்ல வேண்டும். நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து … Read more

சென்னை ஐகோர்ட்டின் 2 கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை

புதுடெல்லி, சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளான வி.லட்சுமி நாராயணன், பி.வடமலையை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்து உள்ளது. இதுபோல, தெலுங்கானா ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளான எல்.என்.அலிஷெட்டி, அனில் குமார் ஜுகந்தி, சுஜனா கலசிகம் ஆகிய மூவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : Madras High Court  Collegium  Central Government 

கோங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசு தொகை; தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

ஐதராபாத், 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்றது. இதில் கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவித்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி மற்றும் தொடரின் … Read more

உக்ரைனுக்கு இங்கிலாந்து வெளியுறவு மந்திரி திடீர் பயணம்; ரூ.602 கோடி நிதியுதவி வழங்க முடிவு?

கீவ், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. ஏறக்குறைய போரானது மூன்றாண்டு கால நிறைவை நோக்கி செல்கிறது. கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. இந்நிலையில், ரஷியாவுக்கு எதிரான மூன்றாண்டு … Read more

ஓய்வூதிய திட்டங்களை ஆராய 3 பேர் கொண்ட குழு

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. … Read more

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் நரேந்திர மோடி

மகா கும்பமேளாவை முன்னிட்டு, பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று புனித நீராடினார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ம் மகா கும்பமேளா தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் புனித நீராடி வருகின்றனர். கடந்த 4-ம் தேதி … Read more

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அமித்ஷா அறிவுறுத்தல்

புதுடெல்லி, ஜம்மு காஷ்மீர் எல்லை பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின்போது, எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை எட்ட வேண்டும் என்று தெரிவித்த அமித்ஷா, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று … Read more

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து

நாக்பூர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு … Read more

டிரம்பின் புதிய உத்தரவு எதிரொலி.. ஈரான் கரன்சி மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

தெஹ்ரான்: ஈரானுக்கு எதிராக அதிகபட்ச பொருளாதார அழுத்தம் என்ற கடுமையான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கான நிர்வாக உத்தரவுகளில் நேற்று கையெழுத்திட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தவும், ஈரான் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளை மீண்டும் தொடரவும் இந்த உத்தரவில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், ஈரான் மீதான தடைகளை விதிக்க விரும்பவில்லை என்றும் ஈரானுடன் ஒப்பந்தத்தை எட்ட விரும்புவதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். டிரம்பின் புதிய உத்தரவைத் தொடர்ந்து ஈரானின் கரன்சி … Read more