சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்ற தொடங்கிய அமெரிக்கா

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தனது தேர்தல் பிரசாரத்தில், அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது போன்றவற்றை வலியுறுத்தி பேசிவந்தார். தற்போது தேர்தலில் வென்று அதிபராக பொறுப்பேற்றதும், டிரம்ப் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக மெக்சிகோ எல்லையை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய டிரம்ப், அந்தப் … Read more

955 அரிய உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ள கலைஞர் கருவூலம் சிறப்பு இணையதள பக்கம்: முதல்வர் தொடங்கினார்

கலைஞர் கருவூலம் சிறப்பு இணையதள பக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்டார். இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறைந்த முன்னாள் முதலவர் மு.கருணாநிதி நடத்திய, ‘தமிழிணையம் 99’ மாநாட்டின் விளைவாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ் தமிழ் இணையக் கல்விக்கழகம் கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தால் 39 நாடுகளில் 181 தொடர்பு மையங்கள் மூலமாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இணையவழியில் தமிழ் கற்பிக்கப்படுவதுடன், கணித்தமிழ் … Read more

ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியல் செய்கிறார்: அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சனம்

புதுடெல்லி: தேச நலன் சார்ந்த விஷயங்​களில் ராகுல் காந்தி பொறுப்​பற்ற அரசியல் செய்​வதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்​டி​யுள்​ளார். சீனா​வுடனான எல்லைப் பிரச்​சினையை மத்திய அரசு கையாளும் விதம் குறித்​தும் மக்களவை எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்தி விமர்​சனம் செய்திருந்​தார். சீனர்கள் நமது எல்லைக்​குள் இருப்​பதாக ராணுவத் தளபதி கூறுகிறார் என்றும் ராகுல் காந்தி கூறி​யிருந்​தார். இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் பாது​காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி​யிருப்​ப​தாவது: இந்தியா மற்றும் சீனா​வின் பாரம்​பரிய ரோந்​துப் … Read more

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக 205 இந்தியர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது. இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது. அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற … Read more

டெல்லி முதல்வர் அதிஷி மீது வழக்கு பதிவு

டெல்லி டெல்லி முதல்வர் அதிஷி மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதியப்பட்டுள்ளது. நாளை 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிக்கப்பட உள்ளது.  நேற்று மாலையுடன் இந்த தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது. கல்காஜி சட்டசபை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தபுரி பகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும், அம்மாநில முதல்வருமான அதிஷியும் அவரது ஆதரவாளர்கள் 50 முதல் 70 பேரும் 10-க்கும் … Read more

டெல்லி சட்டசபை தேர்தல்: சோதனையில் ரூ.194 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல்

புதுடெல்லி, டெல்லியில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்.,8ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே நடைமுறைக்கு வந்தன. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ் கூறுகையில், “சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லியில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில், … Read more

அபிஷேக் சர்மா பந்துவீச்சில் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 248 … Read more

13 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி, கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். இதையடுத்து,டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து டொனால்டு டிரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, “அமெரிக்கா, இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வருவார்” என்று தெரிவித்தார். இந்த சூழலில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 10, 11-ம் தேதிகளில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர … Read more

தூத்துக்குடியில் இருந்து… வின்ஃபாஸ்ட், கமிங் ஃபாஸ்ட்!

ஆட்டோ எக்ஸ்போ 2025வின் ஹைலைட்டே மின்சார வாகனங்கள்தான். அதுவும் குறிப்பா சொல்லணும்னா, மின்சாரக் கார்கள்தான். இதோ இங்கே நாம் பார்ப்பதும் புத்தம் புதியBrand New மின்சாரக் கார்கள்தான் VF 6 மற்றும் VF 7. VF என்றால் Vinfast. இது வியட்னாம் நாட்டுக் கம்பெனி. VF என்றால் Very Fast என்றுகூட அர்த்தம் எடுத்துக் கொள்ள முடியும். ஒரு கார் மான் வேகம் மயில் வேகம் போவது ஓகே. ஆனா, கார் செய்யும் கம்பெனி காரைவிட வேகமா … Read more

மதுரையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அண்ணா நினைவு பேரணிக்கு அனுமதி வழங்கிய எப்படி? – கோர்ட் கேள்வி

மதுரையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அண்ணா நினைவு நாள் பேரணிக்கு அனுமதி வழங்கியது எப்படி? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து முன்னணி சார்பில் 16 கால் மண்டபம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊர்வலம் நடத்த 144 தடையாணை பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆட்சியரின் … Read more