மக்கள் நலனுக்காக பழநிக்கு யாத்திரை செல்லும் வானதி சீனிவாசன்!

கோவை: மக்கள் நலனுக்காக பழநிக்கு யாத்திரை செல்கிறார் வானதி சீனிவாசன். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு யாத்திரை செல்ல விரதம் இருந்து மாலையை அணிந்து கொண்டார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன். பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பாஜக தேசிய மகளிர் … Read more

மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி புதன்கிழமை புனித நீராடல்!

புதுடெல்லி: பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5-ம் தேதி (புதன்கிழமை) பயணம் மேற்கொள்கிறார். சங்கமத்தில் புனித நீராடி, கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்கிறார் என்று பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ‘பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5-ம் தேதி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 2025-க்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், அவர் சங்கமத்தில் புனித நீராடி, கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்வார். பௌஷ் பூர்ணிமாவில் (ஜனவரி 13, … Read more

இங்கிலாந்து இசை நிகழ்ச்சியில் ஜீ டிவியின் 'Sa Re Ga Ma Pa' இறுதி போட்டியாளர்கள்!

‘Sa Re Ga Ma Pa’ ஷ்ரதா மிஸ்ராவும் பார்வதி மீனாட்சியும் உலக அரங்கை ஒளிரச் செய்து, இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

திருப்பரங்குன்றம் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் – ஹெச்.ராஜா அதிரடி!

இந்து மக்களுக்கு எதிராக செயல்படும் திமுக தாலிபன் அரசுக்கு 2026ல் மக்கள் பதிலளிப்பார்கள் என்று மதுரையில் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார். சென்னையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளால் சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்திருக்கிறார். இவருக்கு வயது 87. எம்.ஜி. ஆர், சிவாஜி போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர் புஷ்பலதா. தமிழில் 1961-ம் ஆண்டு வெளியான ‘செங்கோட்டை சிங்கம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரங்களிலும் 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, … Read more

ஐஸ்வர்யா ராய் மகள் கூகுள்,மற்றும் யூ டியுப் மீது வழக்கு

டெல்லி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா கூகுள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். முன்னணி நடிகர்களின் முக்கியமானவரான அமிதாப் பச்சனை போல் அவரது மகன் அபிஷேக் பச்சனும் இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற ஒரு மகள் இருக்கிறார். ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா உடல்நலம், மனநலம் குறித்து கடந்த … Read more

திருப்பரங்குன்றம் – சர்ச்சைக்கு யார் காரணம்? |ஈரோடு கிழக்கு | Parliament | BJP | DMK Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,  * இன்று உலகப் புற்றுநோய் தினம்! * “இரும்பின் காலம் குறித்த ஆவணப் படத்தை அவையில் ஒளிபரப்புங்கள்” -சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு * “கும்பமேளாவுக்குச் சென்ற மக்களை ஒன்றிய அரசு காப்பாற்றவில்லை” – கனிமொழி * மகா கும்பமேளா கூட்ட நெரிசல் விபத்து பற்றி பாஜக நாடாளுமன்றத்தில் சொல்வது என்ன? * தமிழக ரயில்வேக்கு எத்தனை கோடி நிதி ஒதுக்கீடு? * வரிப் பகிர்வு: குறைவுகளை மாநிலங்கள் நிதிக் குழுவிடம் தெரிவிக்கலாம்: … Read more

“திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்…” – பழங்காநத்தம் ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு

மதுரை: “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்து மக்களுக்கு எதிரான நிர்வாகம் நடைபெறுகிறது” என திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மாநிலச் செயலாளர் சேவகன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டச் செயலாளர் அரசப்பாண்டியன் வரவேற்றார். இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியது: “தமிழகத்தில் … Read more

“மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு பெரிய சம்பவம் அல்ல!” – பாஜக எம்.பி ஹேம மாலினி

புதுடெல்லி: மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், ‘கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஒரு பெரிய சம்பவம் அல்ல, அது மிகைப்படுத்தப்பட்டுள்ளது’ என நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 28-ம் தேதி மவுனி அமாவாசையன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் 30 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் … Read more