Parvati Nair: `அன்று பேசத் தொடங்கினோம்' – தொழிலதிபரை மணக்கும் பார்வதி நாயர்

நடிகை பார்வதி நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. பார்வதி நாயர் தமிழில் ‘நிமிர்’, ‘என்னை அறிந்தால்’, ‘கோட்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தனது நிச்சயதார்த்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.  இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தொழிலதிபரான ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். பார்வதி நாயர் திருமண நிச்சயதார்த்தம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “ஆஷ்ரித்தை தற்செயலாக ஒரு விருந்தில் சந்தித்தேன். அன்று பேசத் தொடங்கினோம். ஆனால், உண்மையில் … Read more

வாகனங்களில் கால்நடைகளை கொண்டு  செல்ல புதிய விதிமுறைகள் : உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல புதிய விதிமுறைகளை  அறிவித்துள்ளது/ இன்று சென்னை உயர்நீதிமன்றம், ”கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்லும் போது, அவை நிற்க போதுமான இடவசதி இருக்க வேண்டும். முறையான காற்று வசதி, உணவு, குடிநீர் ஆகியவை கால்நடைகளுக்கு வழங்கப்பட வேண்டும். கால்நடைகள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை மருத்துவ பரிசோதனை செய்த பிறகே லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும். முறையான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும் … Read more

சர்வதேச நிதியை நிறுத்திய டிரம்ப்.. இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் உலக நாடுகளுக்கு நிதி வழங்குவதை நிறுத்த கையெழுத்திட்டுள்ளார். 

Van Gogh: ரூ.3,400-க்கு வாங்கிய ஓவியத்தின் மதிப்பு ரூ.130 கோடியா?

வீட்டிலிருந்த பழைய பொருள்களை விற்பனை செய்தவரிடம் குறைந்த விலைக்கு வாங்கிய ஓவியம் ஒன்று தற்போது அதிசயிக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. 2016-ம் ஆண்டு, பழமையான பொருள்களை சேகரிக்கும் நபர், ஒரு வீட்டிலிருந்து ஐம்பது டாலர்களுக்கு ஓவியம் ஒன்றை வாங்கியுள்ளார். ஐம்பது டாலர்கள் என்பது 2016-ம் ஆண்டு டாலர் பதிப்பு படி, 3,400 ரூபாய். அதை வாங்கியபோது, 19-ம் நூற்றாண்டின் உலகப் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் வின்சண்ட் வான்கோவின் தொலைந்துபோன ஓவியமாக இருக்கலாம் என்பதைப் பற்றி அவர் சிந்திக்கக்கூட இல்லை. … Read more

திருப்பரங்குன்றம் விவகாரம்: பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட் அனுமதி – நிபந்தனை என்னென்ன?

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான ஒரு மணி நேரம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் வெறுப்பைத் தூண்டும் முழக்கங்களைத் தவிர்க்கவும், ஆர்ப்பாட்டம் முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் உயர் நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. … Read more

இந்திய – சீன எல்லை விவகாரம்: ராகுல் காந்தி கருத்துக்கு ராஜ்நாத் சிங் திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி: ராணுவத் தளபதி கூறியது என குறிப்பிட்டு மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்தது தவறான குற்றச்சாட்டு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிப்.3, 2025 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, இந்திய – சீன எல்லையில் நிலவும் நிலைமை குறித்த ராணுவத் தளபதியின் அறிக்கை குறித்து தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். ராணுவத் தலைவரின் கருத்துகள், இரு தரப்பினரின் பாரம்பரிய ரோந்துப் பணிகளுக்கு இடையூறு … Read more

அரசு அங்கன்வாடியில் பிரியாணி கேட்ட குழந்தை-உடனே பதிலளித்த அமைச்சர்! வைரல் வீடியோ..

Anganwadi Student Requesting Briyani Health Minister Responds : ஒரு குழந்தை அங்கன்வாடியில் பிரியாணி போட சொல்லி கேட்கும் வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்திய அணிக்குள் வரும் வருண் சக்ரவர்த்தி…? யாருக்கு பதிலாக…?

Champions Trophy 2025, Team India: இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அடுத்த 45 நாள்களுக்கு கையில் பிடிக்க முடியாது எனலாம். வரும் பிப். 6ஆம் தேதி (நாளை மறுதினம்) இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்க இருக்கிறது. ஒருநாள் தொடர் முடிவடைந்து ஒரு வார இடைவெளிக்கு பின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க உள்ளது. பிப். 19ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற … Read more

Kudumbasthan: `மை டியர் பூதம்' மூசா; என்னை தத்தெடுத்துகிறேன்று அந்த அம்மா கேட்டாங்க – அபிலாஷ் பேட்டி

90-ஸ் கிட்ஸுக்கு `மை டியர் பூதம்’ சீரியல் அவ்வளவு ஃபேவரைட்! அந்த சீரியலில் மூசாவாக நடித்திருந்த அபிலாஷை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர்தான் `குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் மாணிக்சந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் குறித்தான மீம்ஸ்தான் சமூக வலைதளப் பக்கங்களில் தற்போதைய அதிரடி வைரல். `மை டியர் பூதம்’ சீரியலுக்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டவர் `நாகேஷ் திரையரங்கம்’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார். நாஸ்டால்ஜியாவாக ஓர் உரையாடலை நிகழ்த்துவோம் எனத் திட்டமிட்டு … Read more

மதுரையில் தடையை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணியினர் கைது…

திருப்பரங்குன்றம் மலை மீது அமர்ந்து பிரியாணி சாப்பிட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து திருப்பரங்குன்றத்தில் இன்று இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல ரயில் மூலம் வந்த ஆர்எஸ்எஸ் தென் பாரத தலைவர் வன்னியராஜனை விருதுநகர் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா … Read more