பட்ஜெட்டில் தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ்

புதுடெல்லி, டெல்லியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கர்நாடக மாநிலத்திற்கு ரூ.7,564 கோடி ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 97% ரயில் வழித்தடங்கள் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது. விரைவில் முழுவதும் மின்மயமாக்கப்படும். கேரளா மாநிலத்தில் ரூ. 3,042 கோடி ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு 2025-26 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.2,948 கோடி மதிப்பீட்டில் 77 ரெயில் நிலையங்களின் … Read more

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் சிறந்த அணி… 4 இந்தியர்களுக்கு இடம்

துபாய், 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல தரப்பினரும் … Read more

வடக்கு சிரியாவில் கார் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி

டமாஸ்கஸ், வடக்கு சிரியாவின் மன்பிஜ் நகரின் புறநகர் பகுதி அருகே விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனத்தின் அருகே இருந்த காரில் குண்டு வெடித்தது. இதில் 14 பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் 15 பெண்கள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரி ஒருவர் … Read more

புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் தனிச் செயலர், காரைக்கால் ஆட்சியர் திடீர் மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனின் தனிச் செயலராக இருந்த நெடுஞ்செழியன் திடீரென மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக காரைக்கால் ஆட்சியராக இருந்த மணிகண்டன் ஐ.ஏ.எஸ். ஆளுநரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தமாக 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறைகள் மாற்றப்பட்டு, கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆளுநரின் தனிச் செயலராக இருந்த செயலர் நெடுஞ்செழியன் தொடர்ந்து நீடித்து … Read more

பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசை பகுதி குடியிருப்புகளை காப்பாற்ற முடியாது: கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, குடிசைவாசி மக்களுக்கு ரூ.3,000 கொடுத்து அவர்களின் வாக்குரிமை பறிக்க மிகப் பெரிய சதி நடைபெறுவதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அர்விந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ தகவலில் கூறியிருப்பதாவது: டெல்லியில் உள்ள குடிசைவாசிகளிடம் இருந்து எனக்கு பல அழைப்புகள் வந்தன. எதிர்க்கட்சியைச் சேர்ந்த தனிநபர்கள் குடிசை பகுதி மக்களுக்கு ரூ.3,000 கொடுத்து அவர்களை தவறாக வழிநடத்துகின்றனர். … Read more

மெக்சிகோ மீதான 25% வரிவிதிப்பு தற்காலிக நிறுத்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: மெக்சிகோ மீதான 25 சதவீத வரிவிதிப்பை ஒருமாத காலம் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மெக்சிகோவும் கனடாவும் புலம்பெயர்வு மற்றும் ஃபெண்டனில் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு … Read more

ஆப்பிள் ‘ஐபோன் எஸ்இ4’ போன் மார்ச் மாதம் அறிமுகமாகும் என தகவல்

சென்னை: ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் அதன் மலிவு விலை போனான ‘ஐபோன் எஸ்இ4’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல். முந்தைய மாடல் எஸ்இ உடன் ஒப்பிடும்போது இந்த புதிய மாடல் போனில் டிசைன் மற்றும் ஹார்டுவேர் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல். ‘ஐபோன் எஸ்இ4’ போன் எஸ்இ வரிசையில் நான்காவது ஜெனரேஷனாக வெளிவர உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த போன் குறித்த தகவல் பேசுபொருளாக உள்ளது. கடைசியாக எஸ்இ போன் வரிசையில் எஸ்இ3 மாடல் … Read more

இந்தியாவில் முதல்முறை.. புற்றுநோய் மரபணு தரவுத் தளம் சென்னை ஐஐடி-யில் அறிமுகம்!

இந்தியாவில் முதல்முறையாக புற்றுநோய் மரபணு தரவுத் தளம் சென்னை ஐஐடி-யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

தனது கருத்தை  வாபஸ் வாங்கிய பாஜக எம்பி சுரேஷ் கோபி

டெல்லி பாஜக எம் பியும் பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி தனது கருத்தை திரும்ப பெற்றுள்ளார். வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுவுள்ள நிலையில்,  நேற்று நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடிகரும் திருச்சூர் எம்பியுமான சுரேஷ் கோபி பங்கேற்று உரையற்றி உள்ளார். சுரேஷ் கோபி தனது உரையில்,, ” பழங்குடியினர் நலத்துறையை எனக்கு வழங்க வேண்டும் என்று  பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பழங்குடியினர் நலத்துறைக்கு உயர் … Read more

போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு; 144 தடை; உயர்நீதிமன்றத்தில் முறையீடு! -டென்ஷனில் திருப்பரங்குன்றம்!

திருப்பரங்குன்றத்தில் மலை உரிமை சம்பந்தமாக இந்து முன்னணி பிப்ரவரி 4-ஆம் தேதி அறிவித்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், இன்றும் நாளையும் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார் திருப்பரங்குன்றம் கோயில் – தர்ஹா விவகாரம்: அரசு மெளனம்; தொடரும் – இதுவரை நடந்தது என்ன? போராட்டத்துக்கு அனுமதி வழங்கக்கோரி இந்து அமைப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், ‘திருப்பரங்குன்றம் தைப்பூச விழாவுக்கு பக்தர்கள் செல்ல … Read more