Ramya Pandian: "அவன் எப்பொழுதும் என் 6 அடி குழந்தைதான்..!" – தம்பி திருமணம் குறித்து ரம்யா பாண்டியன்

2015-ல் வெளியான ‘டம்மி பட்டாசு’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். 2016-ல் ‘ஜோக்கர்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடமும், மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ மலையாள படத்தின் மூலம் கேரள ரசிகர்களிடமும் கவனம் ஈர்த்த இவர், குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்தார். சமீபத்தில், யோகா பயிற்சி மாஸ்டர் லவால் தவான் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். மணமக்களுடன் ரம்யா பாண்டியன் … Read more

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது! இலங்கை கடற்படையினரின் தொடரும் அட்டூழியம்…

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை தெற்கு மன்னார் அருகே  உள்ள மண்டபம் பகுதி  மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்காள விரிகுடாவில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதையும், இலங்கை அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.  கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதுடன், அவர்கள்  எல்லை தாண்டி வந்துவிட்டதாக கூறி கைது செய்யப்படுவதும், தமிழக மீனவர்கள் … Read more

Suresh Gopi: "பழங்குடியினர் துறைக்கு 'உயர் வகுப்பு' அமைச்சர்" – சுரேஷ் கோபியின் பேச்சும் விளக்கமும்

“பழங்குடியினர் நலத்துறையைப் பிராமணர்கள், நாயுடுக்கள் போன்ற உயர் பிரிவினர் நிர்வகிக்க வேண்டும்” என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசியுள்ளது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு நேற்று சுரேஷ் கோபி பா.ஜ.க-வை ஆதரித்து டெல்லியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சராக ஒரு பழங்குடியினர்தான் இருக்க வேண்டும் என்பது நம் நாட்டின் … Read more

நேர்காணல் மூலம் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க எதிர்ப்பு: தேர்வு நடத்துமாறு அரசு மருத்துவர் சங்கங்கள் வலியுறுத்தல்

சென்னை: நேர்காணல் மூலம் சிறப்பு மருத்துவர்களை நியமிப்பதற்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை, அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ராமலிங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் பொதுச்செயலாளர் அகிலன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மருத்துவர் பெருமாள் பிள்ளை: தமிழகத்தில் திடீரென்று நேர்காணல் மூலமாக 207 மகப்பேறு மருத்துவர்கள் உள்ளிட்ட658 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் … Read more

பிரயாக்ராஜில் நிலவும் மதநல்லிணக்கம்: கும்பமேளாவுக்கு வந்தவர்களை தங்கவைத்து உணவளித்த முஸ்லிம்கள்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்நகரில் வசிக்கும் முஸ்லிம்கள், மகா கும்பமேளாவுக்கு வருபவர்களை தங்கள் பகுதியிலும் குடியிருப்புகளிலும் தங்கவைத்து உதவுகின்றனர். இத்துடன், அவர்களுக்கு உணவு மற்றும் போர்வைகளையும் வழங்குகின்றனர். இந்நிகழ்வுகள், பிரயாக்ராஜில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நகாஸ் கொஹன்னா, சவுக், ரோஷன்பாக், சேவை மண்டி, ராணி மண்டி மற்றும் ஹிம்மத்கன்ஞ் ஆகிய பகுதிகளில் தொடர்கின்றன. கடந்த ஜனவரி 27 நள்ளிரவு, மகா கும்பமேளாவில் நெரிசல் ஏற்பட்டது. இதற்கு அடுத்த நாள் கும்பமேளாவுக்கு வந்தவர்கள் … Read more

இந்து முன்னணி போராட்டம் எதிரொலி – மதுரை இன்று நாளை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

Madurai Thiruparankundram | மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி போராட்டம் அறிவித்துள்ளதை தொடர்ந்து இன்று, நாளை அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி ஈகிள் என்னும் தேர்தல்கள் கண்காணிப்பு குழு அமைப்பு

டெல்லி காங்கிரஸ் கட்சி ஈகிள் என்னும் பெயரில் தேர்தல்கள் கண்கானிப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை கண்காணிக்க, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், தலைவர்கள் மற்றும் நிபுணர்களின் அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவை (EAGLE) அமைத்துள்ளார். இதில் பின்வரும் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழு முதலில் மராட்டிய வாக்காளர் … Read more

ஓலா S1 Pro+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Ola S1 Pro+ e scooter on-Road price and Specs

ரூ.1.76 லட்சம் முதல் ஓலா S1 Pro+ பேட்டரி ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை துவங்குகின்றது.

Kohli: "உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன்" – க்ளீன் போல்டாக்கிய ரஞ்சி வீரரிடம் கோலி கூறியதென்ன?

`மாடர்ன் கிரிக்கெட்டின் ரன் மெஷின்’ என்றழைக்கப்படும் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, ஜனவரி 30-ம் தேதியன்று ரயில்வேஸ் அணிக்கெதிரான ரஞ்சி டிராபியில் களமிறங்கினர். கோலியின் வருகையால் டெல்லி அருண் ஜெட்லி மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. முதல் நாளில் கோலி களமிறங்கும் சூழல் அமையாததால், அவரின் ஆட்டத்தைக் காண்பதற்காகவே இரண்டாவது நாளும் ரசிகர்கள் குவிந்தனர். விராட் கோலி அதற்கேற்றாற்போல, பெரும் ஆர்ப்பரிப்புக் குரல்களுக்கு மத்தியில் கோலியும் களமிறங்கினார். ஆனால், அந்த ஆர்ப்பரிப்புகளையெல்லாம் ரயில்வேஸ் … Read more

ராகிங் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 18 மருத்துவ கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ்

சென்னை: ராகிங் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததாக தமிழகத்தில் 2 கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 18 மருத்துவ கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் நடைபெறாமல் தடுப்பதற்கான விதிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) கடந்த 2009-ம் ஆண்டு வெளியிட்டது. இவற்றை பின்பற்றி கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறும் யுஜிசி உத்தரவிட்டது. இந்த நிலையில், ராகிங் தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாததாக கூறி, தமிழகத்தில் சென்னை சவீதா, … Read more