Ibrahim Zadran: "365 நாள்களாக நான் ODI-ல் விளையாடவில்லை…" – நெகிழும் சாதனை வீரர் இப்ராஹிம் சத்ரான்

சாம்பியன்ஸ் டிராபியில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானும், இங்கிலாந்தும் மோதின. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அபாரமாக ஆடிய இப்ராஹிம் சத்ரான் 146 பந்துகளில் 177 ரன்கள் குவித்து, சாம்பியன்ஸ் டிராபியில் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இப்ராஹிம் சத்ரான் ஆப்கானிஸ்தான் … Read more

“மறுசீரமைப்பால் இந்தி பேசும் மாநிலங்களில் 200 தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு” – செல்வகணபதி எம்.பி

சேலம்: “மத்திய அரசின் தொகுதி மறுவரையறை கொள்கையால் தென்மாநிலங்களுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதால், அபாய மணியை ஒலித்து முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்,” என்று சேலம் எம்.பி. செல்வகணபதி தெரிவித்துள்ளார். மேலும், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையால், இந்தி பேசும் மாநிலங்களில் 200 தொகுதிகள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். இதுகுறித்து சேலம் எம்.பி டி.எம்.செல்வகணபதி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அபாய மணியை ஒலிக்கவிட்டு … Read more

புனேவில் பேருந்துக்குள் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – பஸ் நிலைய சம்பவத்தால் அதிர்ச்சி!

புனே: மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அந்தப் பேருந்தை அடித்து நொறுக்கிய சிவசேனா(உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியினர், மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் புனே நகரின் பரபரப்பான ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தின் நடுவில், நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்குள் 26 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது … Read more

குட் பேட் அக்லி: அப்டேட் வீடியோவில் ‘இந்த’ வீட்டை கவனிச்சீங்களா? இதில் ஒரு சீக்ரெட் இருக்கு..

Good Bad Ugly Movie House : அஜித் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது, குட் பேட் அக்லி. இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.  

பாபர் அசாம் தனது நண்பர்களை அணியில் சேர்த்து கொண்டார் – சேஷாத் கடும் சாடல்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டியிலுமே தோல்வியை தழுவி தொடரைவிட்டு வெளியேறி உள்ளது. இது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது பல முன்னாள் வீரர்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.  இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அகமது சேஷாத், பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழித்து விட்டார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.  இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “பாபர் … Read more

What bro? First, know bro..

What bro? First, know bro.. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் சிறப்புக் கட்டுரை பொதுவாக புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் இரண்டு விஷயங்களை மட்டும் எடுத்த எடுப்பில் மிஸ் பண்ண மாட்டார்கள்.. ஒன்று செய்தியாளர்கள் சந்திப்பு.. தன்னுடைய லட்சியம் என்ன, கொள்கை என்ன, ஒவ்வொரு  விஷயத்திலும் தற்போதைய நிலைப்பாடு என்ன, எதிர்கால திட்டங்கள் என்னென்ன என்பதையெல்லாம் சொல்வார்கள். தனக்கு எவ்வளவு விஷயம் ஞானம் இருக்கிறது என்பதை நிரூபிக்க செய்தியாளர்களின் சரமாரியான கேள்விகளை ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள்.. … Read more

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் இன்று 81 லட்சம் பேர் புனித நீராடல்

பிரயாக்ராஜ், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது. இதையடுத்து நிறைவு விழாவுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்குள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூடும் பிரமாண்ட திருவிழாவாக கருதப்படும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி சாதுக்கள், துறவிகள், மடாதிபதிகள் உள்ளிட்டோர் பிரயாக்ராஜில் வந்து … Read more

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; பேட்டிங் பட்டியலில் ஏற்றம் கண்ட விராட் கோலி

துபாய், 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி (743 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்தப்பட்டியலில் … Read more

சூடான் ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு

கெய்ரோ, சூடான் தலைநகர் கார்ட்டூம் அருகில் உள்ள நகரமான ஓம்டுர்மனுக்கு வடக்கே வாடி சயீத்னா விமான தளத்தில் இருந்து புறப்பட்டபோது அன்டோனோவ் விமானம் விபத்துக்குள்ளானது என்று ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஆயுதப்படை வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை அறியப்படவில்லை. இந்நிலையில் ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 46 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஓம்டுர்மனில் உள்ள கர்ராரி மாவட்டத்தில் உள்ள ஒரு … Read more

வாழ்வா சாவா போட்டியில் 325 ரன்கள்; இங்கிலாந்தை நொறுக்கிய ஆப்கானிஸ்தான்; அடுத்து ஆஸ்திரேலியாதான்!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபியில், அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க வாழ்வா சாவா போட்டியில் ஆப்கானிஸ்தானும், இங்கிலாந்தும் களமிறங்கின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். ஆனால், இங்கிலாந்து பவுலர் ஆர்ச்சர், ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். ரகுமானுல்லாஹ் குர்பாஸ், செதிகுல்லா அடல், ரஹமத் ஷா ஆகியோரை ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினர் ஆர்ச்சர். Hashmatullah Shahidi ஆப்கானிஸ்தான் அணி ஒன்பது ஓவர்களில் 40 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது … Read more